Powered By Blogger
இந்த வாசல் ஏதோவொன்றின் திறப்பு, அல்லது ஏதோவொரு பயணத்தின் தொடர்ச்சி..இலக்கற்ற பயணிகளாய் இளைப்பாற வரும் அவ்வளவு பேருக்கும் கொஞ்சம் அன்பும், சில கதைகளையும் கைகளில் வைத்து காத்திருக்கிறேன்..

ஞாயிறு, 16 மே, 2010

சூன்யத்தின் விரல்களுக்குள்
கரைந்து போகிறது காலம் ரேலை பிரித்து
அனாமத்தாய் வனம் சேரும்
முடுமரங்களின் வேர்களென
விருப்பங்கள் சொற்களாய்
நீண்டு கொண்டிருக்க்கின்றன நொடிதோறும்
இமைப் பிளவில் கசிந்த முதல் ஈரத்தில்
உறவின் சுழி உணர்ந்தேன்
தம் பாதையின் முடிவறியா
ஜிப்ஸியாய்
துயர் சுமந்தைந்தவனை
தயக்கமின்றி தம்பியாக்கிக் கொண்டாய்
சுமப்பதின் சுகம் உணர்ந்தபின்
சிலுவைகளின் கனம் தெரிவதில்லை
நீயின்னும் காணாத என அம்மாவும்
நானின்னும் காணாத உன் அம்மாவும்
நமக்கு அம்மாவான நாளில்
நாமிருவருமே மீண்டும் ஜனித்திருக்கிறோம்
பால்யமறியாத குழந்தையென
உன் உள்ளங்கைகளுக்குள்
சரணடைகிறேன்
நீ தொலைத்த உன் தம்பியாய்
நான் தேடிய அக்காவிடம்

3 கருத்துகள்:

  1. பெயரில்லா17 மே, 2010 அன்று 9:55 AM

    கண்ணுக்குத் தெரியாத அன்பால் கட்டுண்டு கிடக்கிறோம்.பிரதிபலன் பார்க்காத இதன் பால்வீச்சத்தின் தூய்மை உடையும் மனதை செதுக்கட்டும்

    பதிலளிநீக்கு
  2. உனக்கான காத்திருப்பில்
    தொலைந்து போன நாட்கள் ஏராளம்,
    ஆனாலும் இன்றாவது
    அதைப் பெற்றுக் கொண்டேன்
    என சந்தோஷிக்கிறேன்,
    இழந்ததை எண்ணிக் கவலைப்படவில்லை....!
    வரும் நாட்கள் வசந்தமாகட்டும்
    அது ஒன்று போதும்.

    அழகான கவிதை தம்பி.

    பதிலளிநீக்கு
  3. அருமைடா லட்சுமி சுண்டல்..
    உன்னை நினைத்தா பெருமையா இருக்கு..
    உன் அன்புப் பணியும் .., தமிழ்ப் பணியும் தொடர என் வாழ்த்துக்கள்..
    IM PROUD THAT YOU ARE MY BROTHER ....
    வாழ்க வளமுடன்..
    வாழ்க நலமுடன்..
    பாஷு அக்காவின் ஆசியோடு சேத்து அம்மு அக்காவின் ஆசியும் உனக்கு..

    பதிலளிநீக்கு