Powered By Blogger
இந்த வாசல் ஏதோவொன்றின் திறப்பு, அல்லது ஏதோவொரு பயணத்தின் தொடர்ச்சி..இலக்கற்ற பயணிகளாய் இளைப்பாற வரும் அவ்வளவு பேருக்கும் கொஞ்சம் அன்பும், சில கதைகளையும் கைகளில் வைத்து காத்திருக்கிறேன்..

சனி, 20 பிப்ரவரி, 2010

Download the original attachment
நிலாப்பார்த்து கழிந்த ஆற்றுமணல் இரவுகள் ......




வாழ்வின் எல்லா காலங்களிலும் தொடர்ந்து நம்மோடு வருகிறவை சில விசயங்கள் மட்டும்தான். ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாக எவ்வளவோ விசயங்கள் இப்படியிருக்கிறதுதானெனினும் பால்யத்திலிருந்து எப்பொழுதும் எல்லோராலும் பிரித்து விட முடியாத விசயம் நிலா மட்டும்தான். எவ்வளவோ இடங்களில் எவ்வளவோ நாட்கள் வெவ்வேறான வடிவத்தில் நிலாவைப் பார்க்கையில் ஒவ்வொரு சமயமும் புதிதான தோற்றத்திலேயே தன்னை அது மாற்றிக் கொண்டிருப்பதாக படும். சில தினங்களுக்கு முன்பு நெரிசலான டிராஃபிக்கில் டூவீலரில் நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில் மந்தமான நிறத்தில் முழுமைக்குக் கொஞ்ச்ம் குறைவாயிருந்த நிலாவைக் கவனித்து இரண்டு பேருமே சில நிமிடங்கள் எதையும் பேசிக்கொள்ளாமல் அதனைக் கவனித்துக் கொண்டிருந்தோம். ஒரு வகையில் இப்படி ஓவ்வொரு முறை அதனைக் கவனிக்கிற பொழுதும் சொல்லி மறந்த அல்லது சொல்லவேபடாத எவ்வளவோ கதைகளை உணர்த்துவதாகவே அது குறித்து நினைக்கத் தோன்றும். எல்லாக் கதைகளும் நிலாவிலிருக்கிற பாட்டிக்காகவே சொல்லப்படுகிறதென்றும் அவ்வளவும் அவள் சொல்லிவிட்டுப் போன கதைகள்தான் என்றும் நினைப்பது கொஞ்சம் முட்டாள்தனமானதாகத் தோன்றினாலும் சந்தோசமானதுதான்.

சில வேலைகளை அதிகமாக நான் விரும்பியிருந்ததற்குக் காரணம் அதிலிருந்த சுதந்திரமும் இஸ்டத்திற்கு ஊர் சுற்ற முடிந்ததும்தான். எல்லா சமயங்களிலும் எந்தக் கட்டுப்பாடுகளையும் வைத்துக் கொள்ளாமல் சுற்றுவதைத்தான் எப்பொழுதுமே விரும்புகிறவனாக இருக்கிறேன். இப்படி கட்டுப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகையில் தானாகவே அடுத்த வேலையை நோக்கி நகர்ந்து விடுவேன். வாழ்தலென்பது பெரும் பொருளாதாரம் சார்ந்ததொன்று என்பதைவிட எளிமையான சந்தோசங்களில் மட்டும்தான் அர்த்தப்படுகிறதென்பதில் எப்பொழுதும் நம்பிக்கை கொண்டவன் நான்.

நீங்கள் உங்கள் பயணங்களில் அதிகமாக திட்டுகிறவர்களில் முக்கியமானவர்களாய் எப்பொழுதும் மணல் அள்ளுகிற லாரிக்காரர்கள் இருப்பார்கள். எதற்காக இவ்வளவு வேகம் என்பதுதான் உங்களின் கோபமாக இருக்கும், உண்மையில் அந்த வேகத்தில்தான் அவர்களின் அன்றாடம் தீர்மானிக்கப்படுகிறது. லாரிக்காரர்களைப் பற்றி பொதுவிலிருக்கும் பேச்சுக்கள் எப்பொழுதுமே குடிகாரர்களாகவும் ஸ்த்ரீ லோலர்களாகவும் அவர்களை நினைக்க செய்வதைத் தவிர்த்து வேறு எதுவுமிருக்காது. இதில் சிறிதளவு உண்மையிருந்தாலும் அவர்களிடமிருக்கும் நல்ல விசயங்களுக்கு மத்தியில் இதுவெல்லாம் பொருட்டல்ல. நிலாவையும் லாரிக்காரர்களையும் ஒரே நேரத்தில் பேசுவதில் காரணமில்லாமலில்லை. ஏனெனில் நிலாவைப் போலவே எனக்கு அதிகம் நெருக்கமானவர்கள் லாரிக்காரர்கள்தான். பயணங்களுக்கான எவ்வளவோ தருணங்களில் பணமே இல்லாதிருந்தாலும் யோசிக்காமல் ஏதாவது வண்டிகளை மறைத்து சுற்றிக் கொண்டிருப்பேன். இப்பொழுது வரை அதில் கொஞ்சம் சுவாரஸ்யமும் சந்தோசமும் இருக்கவே செய்கிறது. இப்படி நிறைய பேரோடு பழகியிருப்பதோடு ஒரு வருடத்திற்கும் அதிகமாக மணல் அள்ளுகிற லாரிகள் வைத்திருந்த ஒரு சிறிய டிரான்ஸ்போர்ட்டில் சூப்பர்வைசராக இருந்ததால் அவர்களின் மீது தனிப்பட்ட அன்பும் உரிமையும் எனக்கிருக்கிறது.

வழிமறிக்கும் போலிஸ்க்காரர்களுக்கான மாமூல், குறிப்பிட்ட நேரத்திற்குள் மணலை இறக்கிவிட்டு பக்கத்தில் எங்காவது ஜல்லி ஏற்றவேண்டிய அவசரம், ஆர்.டி.ஓக்களின் பிரச்சனையன எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் அதைப்பற்றியான பதற்றமே இல்லாமல் வேலை பார்க்கிறவர்களுக்கு ஆற்றில்தான் எல்லா சந்தோசமும். மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரையுள்ள நான்கு மணல் குவாரிகளிலும் லாரிகள் அணிவகுத்து நிற்பதைப் பார்க்கையில் இவ்வளவு மணலும் எங்கு போகிறது என்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கும். இவ்வளவுதான் ஒரு வண்டிக்கு அள்ளவேண்டும் என்கிற கட்டுப்பாடுகளை எல்லாம் பார்த்தால் வண்டிக்காரர்களுக்கு முதலுக்கு மோசமாகிவிடும் என்பதால் அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் கொஞ்சம் கூடுதலாக மணலை எடுப்பதற்கான எல்லா மேல்வேலைகளுக்கும் ஓட்டுநர்களை பழக்கி வைத்திருப்பார்கள். இதனாலேயே ஓட்டுநர்களுக்கும் பொக்லைன் ஆப்ரேட்டர்களுக்கும் ஒரு நல்ல புரிதலும் உறவும் எப்பொழுதும் இருக்கும். இதில் வழக்கமாக ஒரே இடத்திற்கு வருகிறவர்கள், நிறைய வண்டிகள் வைத்திருக்கிற கம்பெனியென்றால் டிரைவர்களுக்கும் சூப்பர்வைசர்களுக்கும் நல்ல மரியாதை இருக்கும். இந்த மரியாதை என்பது ஒன்றாக சேர்ந்து குடிப்பதில் துவங்கி, ஆத்தோர கிராமங்களில் இருந்து இரவுகளில் வந்துபோகும் பெண்களைப் பகிர்ந்து கொள்வது வரை சகஜமாக இருக்கும்.

நல்ல மணல் எடுக்க வேண்டுமா மதுரையைப் பொறுத்தவரை கமுதக்குடிதான் வாடிக்கையாளர்களின் விருப்பமாயிருக்கும், ஆனால் ஓட்டுநர்களுக்கு ஆகாத இடமென்பதால் பலரும் அதைப் புறக்கணிப்பார்கள். முதல் காரணம், விலை அதிகம் இரண்டாவது இணக்கமாக இருக்க மாட்டார்கள். இதனாலேயே தூதை குவாரிக்கும் பாண்டியூர் குவாரிக்கும் நிறையபேர் செல்வார்கள். அதிலும் மழையில் ஆற்றில் தண்ணீர் வந்துவிட்டால் வழியே இல்லாமல் பாண்டியூர்தான் அவ்வளவு பேரும் வரவேண்டும். இதுமாதிரியான சமயங்களில் மூன்று நாட்கள்கூட ஆகும் மணல் கிடைப்பதற்கு. அவ்வளவு வண்டிகள் ஓரிடத்திலிருந்தால் கேட்கவா வேண்டும். கும்மாளமும் குத்தாட்டமுமாய் திரிவார்கள். நானும் ராமநாதபுரமே கதியென கிடப்பதால் பாண்டியூர்தான் விருப்பமான இடம். வசூல் வேலைகளுக்காக சிவகாசி, கரூர், மதுரையென வெவ்வேறு ஊர்களுக்கு சுற்ற வேண்டியிருந்தாலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக முடித்துவிட்டு திரும்பிவிடுவேன். மிக முக்கியமான காரணம், பாண்டியன் என்கிற நண்பர், அடுத்து ராமேஸ்வரத்திற்கும் தணுஷ்கோடிக்கும் சுற்றுவது கடைசியாக பாண்டியூரிலிருந்த திலகா. திலகா தொழிலுக்கு வந்துபோகும் பெண். அதிகம் போனால் முப்பது வயதிருக்கும். நிறையபேருக்கு விருப்பமானவளாக இருந்தாள். எனக்கு சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதற்கான மாத்ருபூதம். என்ன சந்தேகமெனக் கேட்டால்? விடுங்கப்பா...

ராமாநாதபுரத்தின் அத்தனை வீதிகளிலும் இரவுகளில் சுற்றித் திரிவதும் எங்காவது வம்பிழுத்து சண்டை போடுவதும்தான் அந்நாட்களில் எங்களின் பிரதான பொழுதுபோக்கு. எங்கள் கம்பனி ஓட்டுநர்களோடு பழக்கத்திலிருக்கும் உள்ளூர் லாரி ஓட்டுநர்களும் பின்பாக சேர்ந்து கொண்டனர். குடிப்பதிலும் பென்களைப் பற்றிப் பேஎசுவதிலும் இருந்த நட்பு ஆற்றில் மணல் அள்ளுவதில் பிரச்சனை வராமல் இருந்து கொள்வதற்கும், சப்போர்ட்டாகவும் இருந்தது. மற்ற கம்பெனிகளுக்கெல்லாம் இன்சார்ஜ்ஜாக வருகிறவர்கள் குறைந்தது முப்பது வயது முப்பத்தைந்து வயது ஆட்களாகத்தான் இருப்பார்கள். நான் மட்டும்தான் விதிவிலக்கு. மொத்தமாக நாற்பது கிலோவைத் தாண்டாத உடல், டூவீலரும் ஓட்டத்தெரியாது என்பதால் ஆற்றுக்குள் வண்டியைப் பார்க்க வரவேண்டுமென்றால் பஸ்விட்டு இறங்கி நடந்து வரவேண்டும். பகல் நேரங்களில் மூளை முழுவதுமாக உருகி மூக்கு வழியாய் வந்துவிடும் அளவிற்கு இருக்கும் வெயில். கொஞ்சம் உள்ளூர் ஆட்களின் ஆதரவு இருந்ததுடன் முக்கால்வாசி நேரம் ஆற்றிலேயே கிடப்பதால் பெரும்பாலனவர்களையும் நன்கு தெரிந்து கொண்டவனாய் இருந்தேன். இதில் ஒரே சிக்கல் சில சமயங்களில் குடிப்பதற்கு பணமில்லாமல் போனால் அலுவலக பணத்தில் எடுத்துவிட்டு பிறகு சமாளிக்க பாண்டியனை நாடவேண்டும்.

ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருந்த நாட்கள். நிறைய வண்டிகள் மணல் அள்ள ஆற்றுக்கு வருவதில்லை. மணல் குவாரியும் ஒன்று மட்டும்தான் என்பதால் அரிபரியில் மாட்டிக் கொள்ள வேண்டாமென நினைத்திருப்பார்கள். ஒரு புறம் புனுபுனுவென மழை பெய்தாலும் அதோடு சேர்த்து லோடு ஏற்றுவதும் நடந்து கொண்டேதான் இருந்தது. எங்கள் வண்டிகள் இரண்டை வரிசையில் போட்டு இரண்டாவது நாள் இரவு, அப்பொழுதும் ஜே சி பி வண்டியை நெருங்குவதற்கு வழியில்லை. நான் போய்ப் பார்ப்பதும் மழை காரணமாய் ஆத்துக்குள் தங்க முடியாமல் ராமநாதபுரத்திற்கு ஓடிவந்து விடுவதுமாய் இருந்தேன். அன்றைய தினம் டிரைவர்கள் என்னவானாலும் குடிக்க வேண்டுமென அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டார்கள். தூரல் நின்றபாடில்லை. பாண்டியூர் ஊருக்குள் சென்று சரக்குகள் இறைச்சியென அவ்வளவையும் வாங்கி வந்து விட்டார்கள். அந்தத் தூரலிலும் தார்ப்போய் போர்த்திய வண்டிகளை அண்டி தொழிலுக்கு பெண்கள் வந்து விட்டிருந்தனர். அப்பொழுது கொஞ்சமாக குடித்தாலே தடுமாறக்கூடியவன் அன்று கொஞ்சம் அதிகமாகவே குடித்து விட்டிருந்தேன். நல்ல போதையில் முதலில் நினைவிற்கு வந்தது திலகாதான். யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் மலங்கழிக்கப் போகிறவனைப்போல் இறங்கி ஊருக்குள் புகுந்து போய்விட்டேன். அதற்கு முன்பு வரையிலும் அந்த பகுதியில் பெண்களுடன் போனதில்லை என்பதால் டிரைவர்கள் அதைப் பற்றி நினைக்கவில்லை. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் அவர்கள் யாரிடமும் நான் சொன்னதில்லை. எவ்வளவு தேடியும் திலகாவைப் பிடிக்க முடியாமல் வெறுப்போடு மீண்டும் ஆற்றுக்குள் வந்து கொண்டிருந்தேன், வண்டி கொஞ்சம் முன்னால் நகர்ந்து போயிருந்தது. நான் அதற்கு எதிர்த் திசையில் நடந்து கொஞ்ச தூரம் போனால் யாரோவொரு ஆளிடம் நம்மால் பேரம் பேசிக்கொண்டிருந்தது. பக்கத்தில் போய் கேவலமாக ஒரு சிரிப்போடு நின்றேன். என்ன ராசா ?’ என சந்தேகம் வந்திருப்பேனென்று நினைத்த கேட்டவளை தனியாகக் கூப்பிட அதற்கு ஆச்சர்யம். இன்னொரு புறம் நான் கூப்பிடவும் சிரிப்பு தாங்கவில்லை. அதான உன்னைய என்னவோன்னு நெனச்சேன் பரவாயில்ல. எனச்சொல்லிவிட்டு இரண்டு பேரும் எங்கள் வண்டிக்கு நடந்தோம். எங்கள் ஆட்களுக்கு தெரியக்கூடாதென அந்தப் போதையிலும் பிடிவாதமாய் இருக்க வேறு வழியே இல்லாமல் மீண்டும் ஊருக்குள் சென்றோம். திலகாவின் வீடுதான் இறுதியாக அமைந்தது. அதற்கு முன்பு தொழிலுக்குப் போகும் பெண்கள் எவ்வளவோ பேருடன் பழகியிருந்தாலும் முதல்முறையாகப் புணர்ந்த விலைமாது திலகாதான்.

இரண்டு நாட்கள்கூட போயிருக்கவில்லை எங்கள் ஆட்கள் அவ்வளவு பேருக்கும் விசயம் தெரிந்து போய் பாடாய்படுத்தி விட்டார்கள். அதன்பிறகு ஆற்றுக்குள் நல்லபையன் வேஷத்திற்கெல்லாம் இடமில்லை. தொடர்ந்து பாண்டியூர் மணல் குவாரிக்கு வண்டிகளை அனுப்புவதில் கடுப்பாகிப்போன முதலாளியுமேகூட, மதுரைக்குப் பக்கத்தில டெலிவரின்னா தூதையிலயே எடுக்க வேண்டிதானடா? என்பார். சாதாரணமாக பார்ட்டிகள் இதைத்தான் கேட்கிறார்களெனச் சொல்லித் தப்பித்துவிடுவேன். அந்தளவிற்கு அந்த குவாரியை விரும்பியதற்கு திலகா மட்டும் காரணமில்லை. இரவில் அந்த குவாரியினைச் சுற்றின ஒவ்வொரு விசயங்களும் அவ்வளவு அழகு, கருவேலங்காடுகளும், ஆறும் கலந்து பிணைந்து ஓடும் ஆற்றுநீரில் கடலுக்குப் போவதிலிருக்கிற குதூகலமோ, பரபரப்போ எதுவும் இருக்காது. அவ்வளவு அமைதியாக நகரும் நீரில் சிதறலாய்க் கிடக்கும் நிலாவைப் பார்க்கையில் பொறுக்கியெடுத்தால் அந்த இரவிற்கு என்றில்லாமல் எல்லா இரவுகளுக்குமாய் மனதில் கிடக்கும். இப்படி நான் அள்ளிச் சேகரித்த எவ்வளவோ நிலாக்கள் இன்னும் பத்திரமாய் இருப்பதினால்தான் சில நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்தும்கூட ஆறும் ஆற்றுப்பகுதி மனிதர்களும் வாசனை மாறாமல் என்னுடன் இருப்பதை உணரமுடிகிறது. சேகரித்து வைத்திருக்கும் அவ்வளவு நிலவுத் துண்டுகளிலிருந்தும் தேவைப்படுகையில் எடுத்துக் கொண்டே இருக்கிறேன் கதைகளை சொல்வதற்காக. என் கதைகள் பார்த்ததில் பாதியும் சொன்னதில் பாதியும் அந்த மனிதர்களைப் பற்றிதான். என்னைப் பொறுத்த வரையில் அது ஆறு மட்டுமேயல்ல, சிதறிக்கிடக்கும் அவ்வாற்றின் நிலவுத் துண்டுகள் வெறும் நிலவுத் துண்டங்கள் மட்டுமல்ல.....
Download the original attachment
முடிந்து போனவற்றைப் பற்றின குறிப்புகளும்


எதிர்காலம் பற்றின கேள்விகளும்.....


லக்‌ஷ்மி சரவணக்குமார்.


”தங்களுடைய வளர்ச்சிக்காக சில அரசியல்வாதிகள் குற்றவாளிகளை உருவாக்குகிறார்கள்.வளர்ந்தவுடன் தங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி என்கவுண்ட்டர் செய்து விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை ரவுடிகள் என்பவர்கள் ஒரு ’யூஸ் அண்ட் த்ரோ’ பொருள்.”

இப்படியான வரிகளை சமீபமாய் நான் படிக்க நேர்ந்தது முன்பு ரவுடியாக இருந்து சிறை சென்று திருந்தி தற்சமயம் பத்திரிக்கையாளராகவும் மனித உரிமை ஆர்வலராகவும் இருக்கும் ஜோதி நரசிம்மனின் புத்தகமான “அடியாளில்” இருந்துதான். எழுதப்போவது அவரைப் பற்றியோ அல்லது அந்தப் புத்தகம் குறித்தோ அல்ல, சிறையிலிருக்கும் கைதிகள் பற்றியும் நன்னடத்தையின் காரணமாக அல்லது தண்டனை முடிந்து வெளியேறுபவர்களைப் பற்றியும்தான். மோசமானதானதில்லை, இந்திய சிறைகளைப் பற்றின பிம்பங்கள் ஒன்றும் அவ்வளவு துயரமானதில்லை உலகின் போர் மிகுந்த தேசங்களிலுள்ள சிறைகளுடன் ஒப்பிடுகையில். என்றாலும் இத்தேசத்தின் கேவலமான பொதுசனப் புத்தியிலிருந்து கவனிக்கையில் இவர்களின் துயரக்கதைகள் அவ்வளவும் பொருளாதாரம் சார்ந்த சிக்கலற்ற மனநிலையினை ஒட்டியதாகவேதான் இருக்கின்றன. பெருமளவில் கைதிகளுக்கு பாதுகாப்பான இங்கு பெரும்பாலான சிக்கல்கள் கைதிகள் * கைதிகள் என்கிற அளவிலேயே இருக்கிறதேயொழிய கைதிகள் * அதிகாரிகள் என்கிற அளவில் இருப்பதில்லை. நீதியமைப்பின் எந்தவொரு அக்கரை ரேகைகளுக்கும் ஆட்பட்டதில்லை சிறைச்சாலைச் சுவர்கள், இருப்பினும் அதன் முடிவுகளுக்கு ஆட்பட வேண்டிய துரதிர்ஸ்டவசமான எல்லையில்தான் இவ்வளவும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இப்படியாக நான் பேசமுனைகிற அல்லது சந்தேகங்களின்பாற்பட்டு எழும் கேள்விகளைக் கொண்டு வெவ்வேறான படிப்பினைகளை உருவாக்கிக் கொள்ள முடியும். அடிப்படையில் அவற்றைப் பற்றின புரிதல்கள் என்னமாதிரியானவை என்கிற வகையில்தான் இவ்வளவையும் எளிதாக விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. சிறைச்சாலைகள் பெரும் வணிக மையங்களாய் மாறிவிட்டிருக்கும் இங்கு அதன் பொருளாதார சிக்கல்கள் பற்றின விரிவானதொரு உரையாடலை இன்னும் உருவாக்கமலிருப்பது வியப்புக்குரியதுதான். இவ்விடத்தில் நான் பேச விழைவது சிறையின் பராமரிப்புகள், வளர்ச்சிப் பணிகள் பற்றியதானதல்ல, மேலெழுந்த வாரியாக அறியப்படாமல் விடப்பட்டிருக்கும் சிறு சிறு வர்த்தகம் ஒன்று மிகச்சிறப்பாகவும் அதே சமயத்தில் கட்டுக்கோப்புனுடம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வியாபாரத்தின் காரணகர்த்தாக்கள் பெரும்பாலும் காவலர்கள்தான் எனினும் அதன் முழுமையான பிரதிபலனையும் அனுபவிக்க முடிவது வியாபாரத்தில் ஈடுபடும் கன்விக்ட் வார்டர்களும், ஆயுள்தண்டனைக் கைதிகளும்தான். நவீனப்படுத்தப்பட்டிருக்கும் புழல் சிறையில் தொலைக்காட்சிகள், மின்வசிறிகள் வசதிகளுடன் வாரம் ஒருமுறை கோழிக்கறியும், முட்டையும் கொடுக்கிற அளவிற்கு முன்னேறியிருக்கிறது சிறைத்துறை. வாஸ்தவத்தில், இவற்றையெல்லாம்விட பெரும்பாலனவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் போதை வஸ்துக்கள்தான். இதனை வெளியிலேயே அவ்வளவு எளிதில் பெற்று முடிவதில் சிக்கல்கள் இருப்பதால் சிறைச்சாலைகள் தனது பெரும் விற்பனைப் பொருளாய் இதனைக் கொண்டிருக்கின்றன. மூன்று மாத காலங்களுக்கும் மேலாக விசாரணைக் கைதியாக என் அம்மா திருச்சி சிறையிலும், தண்டனைக் கைதியாக அப்பா எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை சிறையிலும் இருந்திருப்பதால் மிக நெருக்கமாகவே அவற்றைப் பற்றின பிம்பங்களை என்னால் உருவகித்துக் கொள்ள முடிந்திருக்கிறது. போதை என்கிற அளவில் ஆண்களின் சிறைகளிலிருக்கும் நீண்ட சிக்கல்களான விசயங்களுக்கு மத்தியில் பெண்களின் சிறைச்சாலைகளில் சாதாரணமாகவே உணவில் போதை மாத்திரைகள் கலந்து கொடுக்கப் படுவதினை முக்கியமானதாகக் கொள்ள முடிகிறது. நேரடியாக தெரிந்து கொள்ள முடிந்தும் முடியாமலும் இந்த உணவினை உண்ணும் பெண்கள் குடும்பத் துயர் மறக்க வேண்டியே இப்படி செய்யப்படுவதாக மேலோட்டமாக சொல்லப்பட்டாலும் படிப்படியானதொரு போதை நிலைக்குக் கொண்டு செல்கிற வேலைதான் இது.

அதிகம் நம்மால் பேசப்படவும் கவனிக்கப்படாததாகவும் உள்ள பெண்களின் சிறைச்சாலைகளில் பொருளாதாரம், உடல் சார்ந்த சிக்கல்கள் பிரச்சனைகள் நிரம்பக் கிடக்கின்றன. விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் இவர்களின் பெரும்பாலான கட்டுப்பாடுகளும் கன்விக்ட் வார்டர்களின் பார்வையில்தான் இருக்கின்றன. பெண்கள் விசயங்களை இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமிருப்பதால் பொறுத்துப் பிற்பாடு எழுதுவதே சரியானதாயிருக்கும். மாறாக ஆண் சிறைச்சாலைகளின் பின்னாலிருக்கிற பிரச்சனைகளில் சிலவற்றை இங்கு பேசலாம் என்றுதான் தோன்றுகிறது. முதலில் மேலெழுந்த வாரியாக இன்றும் ஊடகங்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் கைதிகளை அடிக்கும் அதிகாரிகளின் பிரச்சனைகளை பற்றி பார்க்கலாம். கைதிகளை அடிக்கிற விசயம் பொதுவாக பனிஷ்மெண்ட் காரணமாகவே நிகழ்கிறது. இப்பொழுது இதிலிருக்கிற முக்கியமான சூட்சுமம் இப்படி அடிபடுகிறவன் பெரும்பாலும் தனியாளாக சிறைக்கு வந்தவராகவே இருப்பாரேயொழிய டீமாக வந்தவர்கள் மாட்டிக் கொள்வதில்லை. காரணம் அரசியல் கொலைக்காகவோ அல்லது அந்தந்தப் பகுதியின் லீடிங் தாதாக்களோ இந்த டீமோடு நெருக்கமான தொடர்பிலிருப்பார்கள். இப்படி இருக்கிறவர்களை அடிக்கிற பட்சத்தில் அல்லது இவர்களிடம் தொந்தரவு செய்கிற பட்சத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்படுகிற பெருந்தொகை நின்றுபோக வாய்ப்பிருப்பதால் அவ்வளவு எளிதில் இது நடக்க வாய்ப்பில்லை. இன்னும் தீவிரமாக இவ்விசயத்தினை அணுக வேண்டுமானால் மிக முக்கியமான அரசியல் கொலைகள் பலவும் சிறைச்சாலைகளில்தான் திட்டமிடப் படுகின்றன. மிக முக்கியமான உதாரணமாக தா.கிருட்டிணன் கொலையைச் சொல்லலாம். இச்சம்பவத்திற்கான முழுத்திட்டமும் சிறைச்சாலையிலேயே முடிக்கப்பட்டு, பரோலில் வந்த தண்டனைக் கைதிகளின் மூலமாகவே நிறைவேற்றப்பட்டதனை இவ்வழக்கு தொடர்பான அறிக்கைகள் நமக்குச் சொல்கின்றன. இதில் நிச்சயமாக எங்களுக்கு எதுவும் தெரியாதென சிறைத்துறை அதிகாரிகள் தப்பித்துக் கொள்ள முடிவதற்கில்லை. இதுமாதிரியான அசைமெண்ட்களுக்கு அனுபவம் வாய்ந்த கைதிகளை பயன்படுத்துவதனை விடவும் முப்பது வயதைத் தாண்டாத இளைஞர்களையே தங்களுக்காக பயன்படுத்துகிறார்கள். சிறைச்சாலைகளில் இதற்கான ஆட்களை கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமான காரியமில்லை.

விசாரணைக் கைதிகள் பற்றின விசயங்களை மறுத்து தணடனைக் கைதிகளைப் பற்றி மட்டுமே தொடர்ந்து நான் பேசுவதன் அத்யாவசியத்தினை நிச்சயமாக நீங்கள் புரிந்து கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது. எனெனில் படிப்படியாக இவர்கள் குற்றவாளியாய் மாறுகிறார்களா அல்லது திருந்தி வீடு திரும்புகிறார்களா என்கிற சந்தேகம் எப்பொழுதுமே இருக்கிற ஒன்றென்பதால் தண்டனைக் கைதிகள் பற்றியே நான் பேச வேண்டியிருக்கிறது. சந்தர்ப்பவசமாக தண்டனை பெறுகிறவர்களில் எந்தவிதமான மாற்றமுமில்லாமல் வீடு திரும்புகிறவர்களைப் போலவே, பொருளாதாரம் சார்ந்தும் சாதி, மத நிலைப்பாடுகள் சார்ந்தும் வேறுமாதியான நட்புகளுடன் புதிய குற்றவாளிகளாய் திரும்புகிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இப்படியாகப்பட்டவர்களின் தனிப்பட்ட விருப்பமானது மெதுவாக குடும்பம் முழுமைக்குமான ஒன்றாய் நீட்சியடைகிற பொழுது குற்றங்களின் எண்ணிக்கையானது வெவ்வேறான தொழில்களையும் உள்ளடக்கி வளர்கிறது. இவர்களின் இலக்கு போதைப் பொருட்கள் விநியோகம் மற்றும் சிறு அரசியல் வாதிகளின் பாதுகாவல் சார்ந்ததாய் இருப்பதுடன் தங்களுக்கிருக்கும் அனுபவங்களின் உதவியுடன் இவர்களைப் போன்ற சந்தர்ப்பவச குற்றவாளிகளை தன்வசப்படுத்துவதிலும் மையங்கொள்கிறது. இப்படி சேர்கிற நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து கேங் லீடர்களாகவும் தங்களுக்கான பகுதிகளைப் பிரித்தெடுத்து அதிகாரம் கொள்ளும் புதிய குழுவாகவும் பத்தாண்டுகளுக்குள்ளாகவே இவர்களின் முகம் மாறிப்போய் விடுகிறது. சாத்தியமற்றதாகத் தோன்றும் இதனை மிக சாமர்த்யமாக செய்கிற வித்தையினை ஒவ்வொருவரும் தங்களிடம் இருப்பவர்களுக்கு அவ்வளவு எளிதில் கற்றுக் கொடுத்து விடுவதில்லை.

இனி சிறைச்சாலைகளில் நடக்கிற வியாபாரம். இதனை இரண்டு விதமாக அணுகலாம். ஒன்று சிறைக்கு உள்ளே நடப்பது மற்றொன்று வெளியில் நடப்பது. வெளியில் நடக்கிற வியாபாரத்துடன் நேரடியான அனுபவம் அல்லது அதற்கு நானும் உட்பட்டிருக்கிறேன் என்பதால் அதனை முதலில் சொவது சரியாயிருக்கும். மனு பார்க்கச் செல்கிற நாட்களில் சர்வ சாதாரணமாக யாராவது நம்மிடம் மிக்சர் பொட்டலங்கள் சோப்புகள் போன்றவற்றைக் கொடுத்து குறிப்பிட்ட ஆட்களின் பெயர்களைச் சொல்லி அடையாளங்களையும் சொல்லிவிடுவார்கள். இதற்கு சிறு தொகையாக நமக்கும் கொஞ்சம் பணம் கிடைக்கும். இதற்கு பெரும்பாலும் அவர்கள் பயன்படுத்துவது இளைஞர்கள் அல்லது பெண்கள். நீண்ட நாட்களாக நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது தெரியாமலேயேதான் இதனை செய்து கொண்டிருந்தேன். பிற்பாடு பெரியவர் ஒருவர், மிக்சர் பொட்டலங்களில் கஞ்சா கொண்டு செல்லப்படுவதையும், சோப் கவர்களுக்குள்ளாக பணம் மடிக்கப்பட்டு வைக்கப்படுவதையும் எடுத்துக் கூறினார். பெரும்பாலும் மாட்டிக் கொள்ள வாய்ப்பில்லை. அப்படியே மாட்டினாலும் எடுத்துச் செல்பவருக்குத்தான் பிரச்சனையே தவிர செய்யச் சொன்னவருக்கு அல்ல. இதனை பெருமளவிலும் தொடர்ந்தும் செய்வதற்கென்றே சிறை வாசல்களில் எப்பொழுதும் சிறிய கூட்டம் ஒன்று இருந்து கொண்டுதான் இருக்கும். இவர்களுக்கும் காவல்துறைக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லையென நம்பினால் அதனை விடவும் அறியாமை வேறெதுவுமில்லை. ஆனால் இதில் தொடர்பு கொள்வது சிறைத்துறையின் கடைநிலைக் காவலர்கள்தான். அவர்களின் வருமானம் இதிலும் நுழைவாயிலில் வருகிறவர்களிடம் வாங்குகிற பத்து இருபதிலும்தான் இருக்கிறது. எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் இவர்கள் பணம் வாங்கிக் கொள்கையில் உள்ளே கொண்டு செல்லப்படுகிற பொருட்களிலும் சில தளர்வுகளை கொடுக்கிறார்கள். இதனோடு தொடர்புடைய இன்னும் சில வியாபாரங்கள் இருந்தாலும் அவை பொருட்களைச் சார்ந்ததாக இல்லாதிருப்பதால் அவற்றைப் பற்றின நீண்ட விவரங்கள் தற்காலிகமாக தேவையற்றதெனத் தோன்றுகிறது.

அடுத்ததாக சிறைக்குள் நடக்கும் வியாபாரம். விஜய் தொலைக்காட்சியில் நான் கலந்து கொண்ட டாக்‌ஷோ நிகழ்ச்சி ஒன்றின்போது முன்னால் கைதி ஒருவரிடம் ஜெயிலில் என்னவெல்லாம் கிடைக்குமென கேட்டபொழுது மிகச் சுருக்கமாக பொண்டாட்டியைத் தவிர்த்து எல்லாமே கிடைக்குமென முடித்தார். உண்மையான விவரமும் இதுதான். ஒரு பாக்கெட் கணேஷ் புகையிலை முப்பத்தைந்து ரூபாய் வரை விற்கக்கூடிய சாத்தியமிருந்தால் அதனைக் கடத்துகிற தைர்யம் யாருக்குத்தான் வராது? பரோலுக்கு வந்திருந்த என்னப்பா இந்த விசயத்தை சொன்னபோது பரிசோதனை முயற்சியாக நானும் செய்து பார்க்க வேண்டுமென ஒரு முடிவுக்கு வந்தவனாய் கொஞ்சம் கணேஷ் புகையிலைப் பொட்டலங்களை வாங்கி அவருடைய டிரவுசரின் உட்புறத்தில் வைத்து மேலே வெள்ளைத் துணியால் ஒட்டிவிட்டாகி விட்டது. பரிசோதகருக்குத் தெரிந்தே கொண்டு போக முடியும்தான் என்றாலும் கணிசமான தொகை அவருக்குப் பங்கு கொடுக்க வேண்டியதிருப்பதால் இந்தப் புதிய ஏற்பாடு. வழக்கமாக மற்றவர்கள் கொண்டு செல்கிற வழிகள் அவ்வளவையும் கேட்டுக் கொண்ட பிற்பாடுதான் இதனை நான் செய்தது. பெரிய டிரவுசராகவும் வெள்ளை டிரவுசராகவும் அணிய முடிந்ததால் இந்த வசதி. இருது பாக்கெட்டுகள் ? இதற்கான லாபத்தில் கொஞ்ச நாட்களுக்குப் பொழுது தாராளமாக ஓடும். நான் சொன்னது வெறும் சாம்பிள்தான், இதற்கும் மேலாக எவ்வளவோ வழிகளில் எவ்வளவோ விசயங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. பரோல் விடுப்புகள் இல்லாத காலத்தில் இதற்கு பெரும் உதவி செய்வது காவலர்கள்தான். அதுவும் தண்டனைக் கைதிகளுக்கு மட்டுமே இந்த வாய்ப்புகள் வழங்கப்படுமே ஒழிய வி்சாரணைக் கைதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. போலீஸ்காரர்களுடன் கொண்டிருக்கிற நட்பு, கொடுக்கப்படும் மாமூல் இவற்றைப் பொறுத்துதான் செய்து முடிக்கப்படுகிற வேலைகளின் அளவும் இருக்கும். இதன் உச்சமான வியாபார சாத்தியம் வெளியில் தீர்த்துக் கொள்ள முடியாத பகையினையும் அல்லது வேலைகளையும் சிறையில் வைத்துத் தீர்த்துக் கொள்ள முடிவதுதான். மிக சமீபத்திய உதாரணம் மிகவும் பாதுகாப்பான சிறைச்சாலையென பெருமையடித்துக் கொள்ளும் புழல் சிறைக்குள் ரவுடி ஒருவர் கொள்ளப்பட்டிருப்பதுதான். சில சமயங்களில் நடக்கிற விசயமென இதுகுறித்து அசட்டையாக நாம் இருந்து விட முடியாது, ஏனெனில் இதன் எண்ணிக்கை வெவ்வேறான காரணங்களின் பின்னால் ஒளிந்து கொள்வதால் சரியான தகவல்களை நம்மால் அறிந்து கொள்ள முடிவதில்லை. அவ்வப்பொழுது கைதிகள் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் மரணம் என்பதுமே திட்டமிடப்பட்ட விசயமாகத்தான் இருக்கக்கூடும்.

இவ்வளவு சிக்கலான இவ்விசயத்தில் குடம்பத்தின் காரணமாக சிலர் திருந்தி வாழ விரும்புவதாக நம்ப முடிந்தாலும் வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் பெரும்பாலனவர்களை குற்றவாளிகளாக்கவே தயாராயிருக்கிறது. அடிப்படையான காரணம் இவையணைத்தும் பொருளாதாரம் சார்ந்ததாக இருக்கிறதுதான். இன்னொரு வகையில் சிறைச்சாலைகளின் மூலமாய் பெரும் பயனடைகிறவர்கள் என தொண்டு நிறுவணத்துக்காரர்களை சொல்லியாக வேண்டும். கைதிகளுக்கு ஹெச் ஐ வி விழிப்புணர்வு என்கிற பெயரில் அவ்வப்போது உள்ளே போய் வருகிறவர்கள் அதற்கான பெரும் நிதிகளை என்ன செய்கிறார்கள் என்பது மர்மமே. அதேபோல் ஆயுள் கைதிகளின் மறுவாழ்வின் மீது அக்கறை கொள்வதாகவும் அவர்களுக்கு இருக்கிற சமுதாயச் சிக்கல்களை தீர்க்கவும் தொண்டு செய்வதாய் சொல்லிக் கொண்டு சிலர் செய்யும் மோசடிகள் ரொம்பவுமே கொடுமையானது. மதுரையில் இப்படி தொண்டு நிறுவணம் நடத்தி வரும் நபர் சொந்த சாதி அடிப்படையிலும் பணம் கமிசனாக கொடுப்பவர்களுக்குமே தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறாரென விமர்சனம் ஒருபுறமிருக்க, இன்னொரு புறம் ஒவ்வொரு வருடமும் அவருக்கு கிடைக்கிற நிதியின் அளவு அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன.

இவ்வளவிற்கும் மத்தியில் விடுதலை செய்யப்படுவதிலிருக்கிற விதிகளைப் பற்றியும் யோசிக்க வேண்டியுள்ளது. எதனடிப்படையில் ஒரு குற்றவாளி திருந்தியுள்ளான் என்பதற்கான வரையறையினை இவர்கள் உருவகித்துக் கொள்கிறார்கள். முதல் காரணம் நன்னடத்தை அதிகாரி என்று சொல்லப்படுகிற ஒவ்வொரு பரோலுக்கும் அனுமதிக் கடிதம் வழங்குகிற ஆள்தான் விடுதலையாகும் கைதியின் நடத்தைக் குறித்த அறிக்கைக் கொடுக்க வேண்டியவராயிருக்கிறார். எனவே துவக்கம் முதலே இவருடன் இணக்கமாயிருப்பவர்களுக்கும் அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுப்பவர்களுக்கு மட்டுமே விடுதலைக்கான சாத்தியங்கள் செய்து கொடுக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தினைக் கொண்டு இவர்கள் செய்கிற அயோக்கியத்தனம் கொஞ்ச நஞ்சமானதில்லை. முதலில் இதுமாதிரியான நன்னடத்தை அதிகாரிகளின் பணியமர்த்தலில் மிகுந்த கவனம் வேண்டுமென்பதுதான் முக்கியம். நேர்மையாக ஒரு விசயத்தை ஒப்புக் கொள்ளவேண்டுமானால், பத்து வருடங்கள் தாண்டியும் விடுதலை பெறாத கைதிகளுக்கு மத்தியில் எட்டு வருட காலத்திலேயே வெளியே வந்திருக்கிற என் அப்பாவிற்கு சத்தியமாக விடுதலை செய்யப்படுவதற்கான எந்த அருகதையும் இல்லை. தவிர்க்கவே இயலாத குடும்பச்சூழல்தான் அங்கங்கு பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து கொடுக்க வேண்டியதைக் கொடுத்து எல்லாம் சாத்தியமானது. இதற்கு பணம் கொடுத்தேன் என்பதைத் தவிர்த்து இதற்காகவே பரோலில் வந்து பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து காரியம் முடித்த அப்பாவோடு வேறு எந்த விசயத்திலும் நான் கவனம் மேற்கொள்ள வில்லை. இப்படி ஒருவர் இரண்டுபேர் மட்டுமே இருப்பதில்லை. இந்த அயோக்கியன்களின் செயலால் பல சமயங்களில் நிஜமாகவே திருந்தியும் வாய்ப்புகளற்ற எவ்வளவோபேர் கைதிகளாகவே தொடர்ந்து தண்டனை அணுபவிக்கிறார்கள். இவையணைத்தையும் தெளிவானதொரு ஆய்வுக்குப்பின் வெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க முடிந்தால் மட்டுமே சிறைச்சாலைகள் இருப்பதற்கான நிஜமான சாத்தியங்களை அடைய முடியும். மற்றபடி திருந்தி வாழ்வதற்காக விடுதலை செய்யப்படுவதாக சொல்லப்படுவதெல்லாம் ........... அபத்தங்கள்தான்.

புதன், 17 பிப்ரவரி, 2010



தாய்மை

தொடர்ந்து பேசுவது எழுதுவது என பல விசயங்களுக்குப் பின்னால் பெண்களைப் பற்றியதான பிம்பங்களே தொடர்கின்றன. எவ்வளவோ விசயங்கள் நம்மிலிருந்து மாறிக்கொண்டிருந்தாலும் கதைகளில் இப்பொழுதும் தேவதைக் கதைகள்தான் மிகுதியாய் சொல்லப்படுகின்றன. ஆண்களுக்கான அழகு பொருட்களைவிடவும் பெண்களுக்கான அழகுப் பொருட்கள்தான் அதிகம். வர்த்தகம் அல்லது வியாபாரம் என்பதையும் மீறினதொரு விசயம், நாம் பெண்களை ரசிக்கிறோம். ஆனால் கொண்டாடுகிறமா என்றால் என்னிடமும் பதிலில்லை. நல்லது. ஏன் பெண்கள் ஆச்சர்யமானவர்களாக இருக்கிறார்கள், அல்லது எது பெண்களைப் பற்றி உயர்வாய் நினைக்கிறது. எவ்வளவோ பெண்களை ரசிப்பதற்கும் அல்லது காதலிப்பதற்கும் அழகு சார்ந்த விசயங்கள் மட்டுமே காரணமாயிருப்பதில்லை ஆண்களுக்கு. அதனைத் தாண்டிய ஒரு விசயம் தாய்மையில் உணரமுடிகிற அரவணைப்பும் அன்பும்தான். ரோஸி ஆண்ட்டியைப் பற்றி நண்பர்கள் பலருக்கும் சொல்லியிருப்பேன். பால்யத்தில் நான் கேட்ட எல்லா தேவதைக் கதைகளையும் சொன்னவள்தான். என் கதைகளில் வந்த எல்லா தேவதைகளும் அவள்தான். அனாதை விடுதி என்று அதனை சொல்லக் கூடாது. சில்ரன்ஸ் வில்லேஜ் இப்படித்தான் இன்றளவும் அந்த இடத்திற்குப் பெயர். காட்டுக்குள் பணிரெண்டு வீடுகள், ஒவ்வொரு வீட்டிற்கும் பத்துப் பதினைந்து குழந்தைகள், அவர்களைப் பாதுகாக்க ஒரு அம்மா. நானிருந்தது ரோஸி ஆண்ட்டியின் அரவணைப்பில். ஆண்ட்டியைத் தவிர்த்து மற்ற எல்லோரையும் அம்மா என்றுதான் கூப்பிடுவோம், வாழ்வில் முதலும் கடைசியுமாக ஆண்ட்டி என்று நான் கூப்பிடுவது அவளை மட்டும்தான். அம்மாவிற்கும் மேலாக எல்லாவற்றிற்கும் மேலாக என்மீது அன்பு கொண்டிருப்பவர்கள் யாரெனக் கேட்டால் யோசிக்காமல் அவளின் பெயரைத்தான் சொல்வேன்.


முதலில் இதுமாதிரியான வெளிநாட்டு நிதியுடன் இயங்கும் விடுதிகளைப் பற்றி சொல்ல வேண்டும். நான் இருந்த விடுதியின் கிளைகளே தமிழ்நாட்டில் மட்டும் எட்டு உண்டு. மற்றவற்றைப் பற்றின புள்ளி விவரங்கள் தெரியாது. ஆனால் எதற்காக இவ்வளவையும் வெள்ளைக்காரர்கள் செய்கிறார்கள்?...பத்து வரிக்குள் பதில் கண்டு பிடிப்பவர்கள் தொலை பேசியிலோ அல்லது ஈ மெயிலிலோ அனுப்பி வைக்கலாம். ஆனால் இப்படி வருகிற குழந்தைகளின் மீது அவர்கள் கொள்ளும் அன்பும் காதலும் வெறுமனே சொல்லிவிட முடியாதது. இன்னும்கூட அந்த நாட்கள் நினைவிலிருக்கின்றன.


எப்பொழுதும் ஏதாவதொன்று குறுக்கே வந்து தொந்தரவு செய்து கொண்டுதான் இருக்கிறது. ரோஸி ஆண்ட்டி. எதனால் அவளை தேவதைகளாக பார்க்க முடிந்தது. உடல் முழுக்க அம்மை போட்டுக் கிடந்த நேரம். பொதுவாக அம்மை போட்டால் மருத்துவ மனைக்கோ அல்லது சம்பந்தப்பட்ட குழந்தைகளின் வீடுகளுக்கோ அனுப்பி வைப்பார்கள். நான் மட்டும் விதி விலக்கு. என்ன ஆனாலும் நானேபார்த்துக் கொள்கிறெனென எங்கும் அனுப்பாமல் தன்னுடனேயே வைத்துக் கொண்டாள். தன் குழந்தையான சோஃபியா வைலட் பற்றி சொல்லத் துவங்கினாள் என்றாள் பிறகு பொழுது போவது தெரியாது, வலியும் தெரியாது. என் சமவயதுக் காரியான அவள் வளர்ந்த பிறகு எனக்கே கட்டிக் கொடுப்பதாகவும் இரண்டு பேரையும் நான் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் மாறி மாறி அவளும் பேசிக்கொண்ட குடும்ப விசயங்கள் பாதி நினைவிலும் பாதி இல்லாமலும் இருக்கின்றன. ஏன் என்னை மட்டும் அவளுக்குப் பிடித்துப் போனது?. சாதாரணமாக புதிதாக வருகிற குழந்தைகள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவார்களென்றால் முதல்நாளே நான் அம்மாவிற்கு டாடா சொல்லி அனுப்பி வைத்திருக்கிறேன். அதிகமில்லை ஜெண்டில்மேன், உமன் அப்பொழுது எனக்கு ஐந்து வயதுதான். இது பிற்பாடு அம்மா சொல்லித்தான் எனக்கும் தெரியும்.


வருடம் வருடம் குழந்தைகள் விழா நடக்கும், விளையாட்டுப் போட்டிகள் பாட்டுப் போட்டி என்று அதுவொரு திருவிழா...அந்த வருடம் என் வயது ஆட்களோடு நான் கலந்து கொண்ட எல்லா போட்டியிலும் நான்.................... கடைசி ஆள். கலந்து கொள்ளாமல் இருக்கலாமென்றால் ஆசை யாரை விட்டது?...அழுகையென்றால் அப்படியொரு அழுகை....அன்று முழுக்க என்னை சுமந்து கொண்டே இருந்தவள் பலமுறை அதைச் சொல்லி சிரித்திருக்கிறாள். சாப்பிடுவதற்கு முன், பிரேயரும், தூங்குவதற்கு முன்பாக ஸ்தோத்திரப் பாடல்களும் நான் விடுதியை விட்டு வந்த பிறகும் கூட பல நாள் பழக்கமாக இருந்தது. அவ்வளவு மவள் சொல்லிக் கொடுத்தவை. விடுமுறை தினங்களில் வீட்டிற்கு அனுப்புவதுகூட அவளே வந்து வீட்டில் விட்டால்தான் மனசாரும். வீடும் ஐந்தாறு கிலோமீட்டர்களுக்குள்தான் என்பதால் பெரிய பயண தூரமில்லை. இப்படி அவளோடு கழிந்த தினங்கள் எப்பொழுதும் வசந்தமானவை. எங்கிருக்கிறாலென தெரியவில்லை. விடுதியிலிருந்து வந்த சில வருடங்களிலேயே அதையெல்லாம் மறந்தும் விட்டிருந்தேன். ஆனால் ஒரு வயதிற்குமேல் எல்லோரிடமிருந்தும் தனிமைப் பட்டு மொழியே தெரியாத குளிர் மிகுந்த ஓரிடத்தில் யாரென்றே தெரியாத ஒரு நண்பனுடன் பயணம் செய்கையில் தற்செய்லாக உடன் பயணம் செய்யும் பெண்ணின் பெயரைக் கேட்டு அவளை நினைவு படுத்தி கொள்ள முடிந்தது. சோஃபியா வைலட். இந்த பெயரைக் கேட்டு எப்படி சும்மா இருந்திருக்க முடியும்?... இதில் சுவாரஸ்யமான விசயம் நண்பர்களே ரோஸி ஆண்ட்டிக்கு திருமணமே ஆகியிருக்கவில்லை...இதுவும் கூட விடுதியை விட்டு வெளியேறுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் எனக்குத் தெரிய வந்திருந்தது. ஆனால் இப்பொழுதும் யாராவது இந்த பெயரை உச்சரித்தால் சில நொடிகளாவது அந்த முகத்தை பார்க்கத் தோன்றும்.

இதற்குப் பின்பாக நான் ஆச்சர்யப்பட்டது. ஒரு பெண்ணால் அல்ல. சில பெண்களால். அக்கா இல்லையென்கிற வருத்தம் எனக்கு எப்பொழுதும் உண்டு.

வீட்டிற்கு ஒரு பிள்ளையாய் பிறப்பதை அதிர்ஸ்டம் என்று சொன்னால் அவர்களுக்காக அனுதாபப்படுவேன். உண்மையில் அப்படியிருப்பது சாபம் நண்பர்களே...உங்களின் சந்தோசங்களை அந்தரங்கத்தினை பகிர்ந்து கொள்ள உங்களோடே ஒரு உயிர் இருப்பதுதான் வரம்,இல்லாத பட்சத்தில் அதற்காக நீங்கள் கொள்ளும் வருத்தம் வேறு உறவுகளால் தீர்த்து வைத்திட முடியாத வொன்று. மிகச் சிறிய வயதிலிருந்தே இந்த வருத்தம் எனக்குண்டு. ஆறாம் வகுப்பு படிக்கையில் இருந்தே பகுதி நேர வேலைகள் பார்க்கத் துவங்கி விட்டேன். பள்ளி முடிந்து வந்ததும், பக்கத்திலிருந்த மெஸ்சில் வேலை.. கடைக்குப் போவது, உணவுகளை எடுத்துக் கொண்டு வழக்கமாக சாப்பிட வருகிற ஹோமியோபதி மாணவிகளுக்கு எடுத்துப் போவது, இதுதான் வேலை. இப்படி நான் சாப்பாடு எடுத்துப் போன மாணவிகள் தான், அக்காவே இல்லாதவனுக்கு அக்காக்களாய் இருந்தவர்கள். ஒரே அறை என்று இல்லாமல் நான்கைந்து அறைகளாக இருப்பார்கள், ஆனால் யாரிடமும் அன்புக்குக் குறையிருக்காது.


சில விசயங்களை எவ்வலவு எழுதினாலும் தீராதுதான் சில விசயங்களை எழுதிவிடுவதை விடவும் பாதுகாத்து வைத்துக் கொள்வதில் பெரிய சந்தோசம் இருக்கவே செய்யும் என்றாலும் இதில் நான் குறிப்பிடக் காரணம். ஒரு சுயநலம்தான். கவனிக்க, திருமங்கலம் அரசு ஹோமியோபதி கல்லூரியில் உங்களுக்குத் தெரிந்தவர்கள் படித்திருந்தால்{பத்து வருடங்களுக்கு முன்பு..} அவர்களிடம் தயவு செய்து இதனை சொல்லி நினைவிருக்கிறதாவெனக் கேளுங்கள். அத்தனை பேரிலும் யாராவது ஒருவரையாவது சந்த்தித்துவிட்டால் போதும் அதைவிட பெரிய சந்தோசம் வேறொன்றுமில்லை.


ஒரேயடியாக செண்டிமெண்டையும் எழுதுகிறேன் என்று கோபப்பட வேண்டாம், எல்லாம் சேர்ந்ததுதானே மனித இயல்பு....அடுத்ததாக எப்பொழுது நினைத்தாலும் சில நிமிடங்கள் என்னை மெளனமாக்கிவிடுகிற விசயம்.......... தொடர்ந்து எந்த வேலைக்குப் போனாலும் இரவு வேலைக்குத்தான் போவேன். போய்விட்டு வந்து பகலில்தான் தூங்குவது, எங்கள் தெரு அடக்கமான தெரு என்பதால் சாலையில் யார் நடந்தாலும் உடனடியாக வீட்டிற்குள்ளிருந்தே தெரிந்து கொள்ள முடியும். பகல் நேரங்களில் உப்பு விற்பதற்கு, கீரை விற்பதற்கென ஆட்கள் வந்து போய்க் கொண்டே இருப்பார்கள். அப்படி வருகிறவர்களில் பக்கத்து ஊரிலிருந்து முறுக்கு சீடை விற்க வருகிற ஒரு பெண். பெயர் வசந்தா என்று நினைக்கிறேன். கருப்பழகி. எல்லோருடனும் ரொம்ப நெருக்கமாகப் பழகக்கூடியவள். பொதுவாக இதுமாதிரியான வியாபாரத்தில் பணம் கொடுப்பது மொத்தமாக கொடுக்கிறேன் பேர்வழி என்று எப்பொழுதும் கொஞ்சம் தொகையினை நிறுத்தி வைத்திருப்பர்கள். எங்கள் தெருவில் அவளிடம் கடன் வைக்காதவர்கள் பாவம் செய்தவர்கள்.


இப்படி தினந்தோறும் வருகிறவளின் மீது தனிப்பட்ட கவனிப்பு எனக்கு எப்போதும் உண்டு. ஒரு முற்பகலில் அப்பொழுதுதான் நான் படுத்திருந்தேன், வழக்கம்போல வியாபாரத்திற்கு வந்திருந்தவள் வீட்டிற்குள் சாதாரணமாக வந்துவிட, பல நாட்களாய் காத்திருந்தவனைப் போல பிடித்து அணைத்துக் கொண்டு முத்தமிடத் துவங்கிவிட்டேன். சில நிமிடங்கள்தான், விடு தம்பி விடு தம்பி என புரட்டித் தள்ளிவிட்டு வெளியேறிப் போய்விட்டாள். எனக்கு அது பற்றியான குற்றவுணர்சியோ அல்லது பயமோ எதுவும் இருந்திருக்கவில்லை. அவளும் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போகத் துவங்கியிருந்தது. அப்பொழுதும் கூட அவளைப் பார்க்க முடியவில்லை என்றுதான் வருத்தமாக இருந்தது. என்னடாவென நீங்கள் என்னைப் பற்றி நினைக்கலாம் நண்பர்களே? இதெல்லாம் வெறும் சாம்பிள்தான், முழுதாகச் சொன்னால் காறித்துப்பி விடுவீர்கள். சில நாட்களுக்குப் பின்பாக அவளுக்கு அவளின் அப்பா வரத் துவங்கினார். மெதுவாக அந்த சம்பவத்தையும், அவளையும் மறந்து போய்விட்டிருந்தேன். ஒருநாள் காலையில் சினிமாவிற்குப் போகிற அவசரத்தில் மதுரைக்குப் போகிற பேருந்தப் பிடிக்கிற அவசரத்தில் பெருந்து நிலையத்திற்குள் ஓடிக்கொண்டிருந்தேன். சடாரென கையைப் பிடித்து நிறுத்திய பெண்ணை பார்த்ததும் கொஞ்சம் பதட்டமாகி விட்டது. அவளேதான். என்ன பேசுவதெனத் தெரியவில்லை, அல்லது அவள் என்ன கேட்கப் போகிறாள் என்பதும் தெரியவில்லை. எதுக்கு இவ்ளோ அவசரம்? என்றவள் வா டீ சாப்பிடலாம் என்றாள். எனக்கு முன்பை விட குழப்பமும் பத்ட்டமும் அதிகமாகி விட்டது. தயங்கியபடியே நின்றேன். அட வாப்பா....என இழுத்துக் கொண்டு சென்றவள். எப்பொழுதும் போல் வீட்டைப் பற்றி தெருக்காரர்களைப் பற்றி விசாரிக்கத் துவங்கிவிட்டாள். எல்லாவற்றிற்கும் ஒற்றை வரியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். எனது தயக்கத்தைப் புரிந்து கொண்டவளாய், “இன்னுமா அதையே நெனச்சிட்டிருக்க. நல்ல பய போ. நான் அத எப்போவ மறந்துட்டேன்.” என்று சொல்ல முகத்தை எங்கு கொண்டு போய் வைப்பது என்று தெரியவில்லை எனக்கு. தண்டிப்பதை விடவும் மன்னிக்கப்படுவது பெரும் வேதனை நண்பர்களே. ரொம்ப நாட்களுக்கு அதனை மறக்க செய்துவிடாமல் துன்புறுத்தும். அப்படித்தான் இதுவும்.

ஏற்கனவே நிறைய சொல்லியாகி விட்டது, இனியென்ன?...இப்படிச் சொல்வதற்கென எல்லோருக்குமே ஏதோ சில விசயங்கள் இருக்கத்தான் செய்யும். அதனால் மிச்ச பக்கத்தினை அவரவர் நினைவுகளால் நிரப்பிக் கொள்ளுங்கள்.....


பைத்தியமாதலின் புதிர்கனங்கள்

நாம் மனரீதியாக சரியாக இருக்கிறோமென்பதனை நாமே உணர்ந்து கொள்வதைவிடவும் பிறரின் மூலமாக தெரிந்துகொள்வதே யாதார்த்தமாய் இருக்கிறது, மாறாக நாம் சரியாயிருக்கிறோமோ என்கிற கேள்வி நமக்கு எழுகிறபொழுது சிறியதாக ஏதொவொன்று நமக்குள் சேர்ந்துவிடுகிறது அல்லது நீண்ட நாட்கள் இருந்தவை வெளியே செல்ல நேரிடுகிறது. பெரும் நெருக்கடிகள் சூழ்ந்த இன்றைய சூழலில் நோயாளிகளாக்கப் படுபவர்களின் எண்ணிக்கை நாம் கற்பனை செய்யமுடியாத ஒன்று. ஒவ்வொரு வருடமும் புதியதொரு நோயை உலகின் மருந்து வியாபாரிகள் அறிமுகப்படுத்தி அதற்கான தற்காப்பிலும் சிகிச்சயிலும் பல மில்லியன் டாலர்களை சம்பாதிப்பவர்களாய் இருக்கிறார்கள். ஆக இங்கு நடக்கிற எல்லா விசயங்களையும் எக்கனாமிக்கலாகவே நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.


மிகச்சில வருடங்கள் அந்தரங்கமாக என்னைச் சலனப்படுத்திய சில சம்பவங்களுக்குப் பின்னால் ஒரு கேள்வி தொடர்ந்து வந்தபடியே இருக்கிறது. ஒருமனிதன் தன் இயல்பினைத் தவறவிட்டு மனோரீதியாக பாதிக்கப்படும் குறிப்பிட்ட கனம் என்னவாயிருக்கும்? நிச்சயமாக விடைத் தேடப்பட வேண்டிய இக்கேள்விக்கு எவ்வளவு தூரம் பதிலிருக்குமென்று தெரியவில்லை. இது சில வருடங்களுக்கு முந்தைய ஒரு சம்பவம், அப்பொழுது இரவு நேர ஆடியோ கேசட் கடையில் வேலை செய்துகொண்டிருந்தேன். காலை எட்டுமணியிருக்கும், ஒரு சிறுவன் கடை வாசலில் வந்து நின்றவன் பசிக்கிதென்றும் சாப்பிட ஏதாவது வாங்கித்தருமாறும் கேட்டான். முந்தைய தின இரவிலிருந்தே அவனைக் கவனித்திருந்தேன் தான், ஒருவேளை ஏதாவது லாரி கிளீனராக இருக்கக் கூடுமென பெரிதாக கண்டுகொள்ளவில்லை. நானும் நண்பனுமாகச் சேர்ந்து கொஞ்சம் இட்லிகளை வாங்கிக்கொடுத்தோம். அவனிடம் பேசின கேட்ட எதற்குமே பதில் சொல்லாதவனாய் இருந்தான். சாப்பிட்டு முடித்தவன் கடையை ஒட்டியே படுத்தும்விட்டான். சரிபோகட்டுமென்று விட்டுவிட்டு ஷிஃப்ட் முடிந்து வீட்டிற்குச் சென்றுவிட்டேன். மீண்டும் இரவு திரும்பி வருகையில் அப்பொழுதும் அவன் அங்கிருந்து போயிருக்கவில்லை. என்னைப் பார்த்ததும் சாப்பாடு வேண்டுமென கேட்டு நிற்கவும்தான் கொஞ்சம் கலக்கமாகத்துவங்கியது. ஏனெனில் நான் அப்பொழுது வாங்கினதே முப்பத்தைந்து ரூபாய்ச் சம்பளம்{இதற்கு இரவு 9 மணியிலிருந்து காலை 9 மணிவரை கடையில் இருக்க வேண்டும்} வேறு வழியில்லாமல் உணவு வாங்கிக்கொடுத்து விட்டு வேலையைக் கவனிக்கத்துவங்கி விட்டேன். தொடர்ந்து இதைச் செய்யமுடியாது எனபதுடன் அவனை அங்கிருந்து அனாதரவாக விரட்டி விடுவதற்கும் மனதில்லை. யோசனைக்குப் பின்னால் மதுரையிலிருக்கும் ஒரு சைல்ட் கேர் செண்டருக்குத் தகவல் சொல்லி வந்து கூட்டிப்போகச் சொன்னேன். மறுநாள் காலையில் கூட்டிப்போவதாகச் சொல்லிவிட்டார்கள். மீண்டும் காலையில் நினைவுபடுத்திவிட்டு முகவரியையும் சொல்லி வரச்சொல்லி பிறகு அவர்கள் வரும்வரை காத்திருக்க முடியாமல் நான் வீட்டிற்குப் போய்விட்டேன். இரவு வந்த பொழுதுதான் இவனைக் கூட்டிப்போக வந்தவர்கள் காலில் முடி அடர்த்தியாக வள்ர்ந்துள்ளதென்றும் வயது சிறிது அதிகமாக இருக்கலாமென கூறி அழைத்துப்போக மறுத்துவிட்டதாகக் கூறினார்கள். அவனும் சாய்ந்தரத்திற்குமேல் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டான். அதன்பிறகு சில நாட்கள் அவனை எங்குமே பார்க்க முடியவில்லை. ஒரு நாள் மாலையில் நூலகத்திலிருந்து திரும்பி வருகையில் நகரின் பிரதான வீதியில் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு அல்லது கிழிபட்டு ஏதேதோ பினாத்தியபடி குறுக்கும் நெறுக்குமாக ஓடிக்கொண்டிருந்தான். சில நிமிடங்கள் அதிர்சியாக இருந்தும் எதுவுமே செய்ய முடியாத இயலாமைதான் அப்பொழுது மிஞ்சியிருந்தது. எது அவனை பைத்தியமாக்கியிருக்கக் கூடும் பசியா? அல்லது தனக்கு ஒருவருமில்லை என்கிற வெறுமையா? அல்லது இதைத்தாண்டி வேறு ஏதோவொன்று ஒளிந்துகிடக்கிறதா?


நாய் பூனைகளைப் பராமரித்து வளர்க்கிற எவ்வளவோ பேருக்கு ஏன் இதுமாதிரியாக நிராதரவான மனிதர்களை பராமரிக்க வேண்டுமெனத் தோன்றுவதில்லை. சாலையில் பின்னிரவில் கடுங்குளிரிலும் மழையிலும் ஒதுங்குவதற்கான எந்த இடங்களும் இல்லாமல் அல்லாடும் முதியவர்களும் குழந்தைகளும் நம்மைச் சுற்றியே நிரைய இருக்கிறார்கள். பாதுகாப்பான நமது வீடுகளின் சுவர்களுக்கு அப்பால் எதையுமே பார்க்கத் தெரியாதவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறோம். சாலையில் நம்மிடம் கையேந்துகிறவர்களிடம் பிச்சை கொடுப்பதை மறுக்கும் கொள்கையுடையவன் என வியாக்கினம் பேசிவிட்டு பியர்போத்தல்களுக்கு செலவளிக்கும் அறிவுஜீவிகள் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் எவ்வளவு நேர்மையான தூய்மையானவர்களாய் இருந்தாலும் மதிக்கத் தகுதியற்றவர்கள். அனிச்சையாய் கையிலிருந்து எடுத்துக் கொடுக்கிற ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் நாணயத்தில் ஒன்றும் குறைந்து போய்விடுவதில்லை நண்பர்களே. சென்னையின் மின்சார ரயிலில் நாள்முழுக்க பயணம் செய்துபாருங்கள், ஒரு நாளைக்கு எத்தனையாயிரம் பயணிகளிடம் பிச்சைக்காரர்கள் யாசகம் கேட்டு நிற்கிறார்கள். எவ்வளவுபேர் இதில் கொடுப்பவர்களாக இருக்கிறார்களென கவனித்தால் அதிர்ச்சியடையக்கூடும். மூன்று நான்கு வயது சிறுமிகள் கையேந்தி நிற்கையில் மிக மும்முரமாக செய்தித்தாள் மயிரை படிக்கிற பாவனையில் நமது கனவான்கள் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருப்பார்கள். சிலதினங்கள் இவற்ரையெல்லாம் பார்த்தே கடும் மன உளைச்சல்தான் மிஞ்சியது. கிண்டி ஸ்டேசனை வண்டிக் கடக்கிறது காசுகேட்டு நின்ற சிறுமியை இருக்கையில் அமர்ந்தபடியே அடுத்த இடம் பார்க்கச் சொல்லி ஒருவன் தள்ளிவிடுகிறான். ஒருவரும் வாய்திறந்து ஒருவார்த்தைக் கேட்பதற்கில்லை, இதில் இந்த காதலிக்கிற மயிராண்டிகளின் தொல்லை வேறு. ஏனோ அதிகமாக கோபமேபடாதவன் அன்று வந்த ஆத்திரத்தில் சகட்டுமேனிக்குத்திட்டத் துவங்கிவிட்டேன். யாரையும் நான் அவ்வளவு கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டியதில்லை நிச்சயமாக அவனும் யாரிடமும் அவ்வளவு திட்டு வாங்கியிருக்க மாட்டான். அவசரமாக கோடம்பாக்கம் ஸ்டேசனில் இறங்கி ஓடிவிட்டான்.

எழுதிற விசயம் வெவ்வேறு இடங்களுக்கு மாறுவதாக உங்களுக்குத் தோன்றலாம். அடிப்படையில் எல்லாவற்றிற்குமே சம்பந்தம் இருக்கிறது. சில தினங்களுக்கு முந்தைய ஒரு சம்பவத்தை சொன்னேன்றால் இன்னும் அதிர்ச்சியாகக் கூட இருக்கும். மயிலாடுதுறையில் நடந்த சம்பவம். அலுவகங்கள் பள்ளி கல்லூரிகள் முடிந்து வீடு திரும்புகிற மாலை நேரம் நகரப்பேருந்துகளின் ஆராவாரங்கள் மிகுந்து கிடக்கும் முக்கியவீதி பேருந்திலிருந்து இரங்கிய ஒரு இளம்பெண் அதிகமாகப்போனால் இருபது வயதுகூட இருக்காது. அவ்வளவு அழகானவள்,கல்லூரி முடிந்து திரும்பியிருப்பாளாயிருக்கும். திடீரென சத்தமாக சிரித்தவள் உடைகளையெல்லாம் கிழித்துவிட்ட நிர்வாணமாக அந்தச் சாலையையே சுற்றி வந்தாள். அவ்வளவு பரபரப்பும் சில நிமிடங்களில் அடங்கிப் போனதோடு எல்லா வாகனங்கலையும் நிறுத்திவிட்டார்கள் ஒரு பெண்ணின் ரெளத்ரமான சிரிப்பொலி மட்டுமே இரண்டு கிலோமீட்டர் சுற்றளவிற்கு கேட்குமளவிற்கு நிலவிய மெளனமது. உண்மையில் அவளின் சிரிப்பும் நிர்வாணமும் சுறியிருந்த அத்தனைபேருடைய பிரதிபலிப்புதான். அந்த வயதில் ஒரு மகள் இருப்பவர்களும் அல்லது அக்கா தங்கைகள் இருப்பவர்களும் அல்லது காதலியை நினைவுபடுத்தக் கூடியதுமான பேரதிர்ச்சிதான்.சற்றேறக்குறைய முக்கால் மணிநேரத்திற்குப்பின் மகளிர் காவலர்கள் வந்து அவளை மீட்டெடுத்தனர். அங்கிருந்தவர்கள் இயல்பிற்குத் திரும்பி கலைந்த நொடி மாபெரும் வன்முறை நடந்து பெரும் சேதங்கள் விளைவித்த சோகத்துடந்தான் இருந்தது. அவ்வளவு அழகானவளுக்கு அப்படியென்ன சுமை இருந்திருக்கும்? தன்னிடமிருப்பதை பேசுவதற்கு பகிர்ந்துகொள்வதற்கு ஒருவர்கூடவா இல்லாமல் போய்விட்டார்கள். மறுநாள் பத்திரிக்கையில் செய்திபோடுகிறான் நடுவீதியில் இளம்பெண் நிர்வாண ஓட்டமென்று. எதை செய்தியாக்குவது என்கிற மனிதாபிமானமில்லாமல், அப்படி ஓடியது செய்திபோட்டவனின் மனைவியாக இருந்திருந்தால்?


நான் சொல்கிற சம்பவங்கள் வெறுமனே சாம்பிள்கள்தான் நிஜம் இதைவிடவும் தீவிரமானது. கவிஞனும் நண்பருமான ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கையில் பசிமிகுந்த ஒரு பிற்பகலில் உணவு ஏற்படுத்திய தவிப்பு என்னை முக்கால் பைத்தியமாய் ஆக்கிவிட்டிருந்ததென்றார். இப்படி எவ்வளவோ கனங்கள் காரணங்கள் இருக்கின்றன. மிலொஸ் ஃபோர்மெனின் one flew over the cuckoos nest படம் பாருங்கள். சைக்காலஜிக்கலாகவும் போலித்தனமான தத்துவங்களின் பின்னாலிருக்கும் மனிதவாழ்விற்குமான போதாமையும் படம் முழுக்க சென்றிருக்கும்.{ எனக்கும் விருப்பமான திரைப்படங்களைப் பற்றி எழுத ஆசைதான், ஆனால் ஒருசிலர் திரைப்படங்கள் குறித்து எழுதுவதைப் பார்த்தால் உலக திரைப்படங்கள் குறித்து எழுதுகிற இவர்களைவிட குமுதம் குங்குமம் வகையறா சினிமா விமர்சனங்கள் மேலெனத் தோன்றுகிறது. சத்தமாக சொன்னால் பஞ்சாயத்து எனக்கெதற்கு ஊர்வம்பு.} வாழ்வின் மீது கொள்ளும் விசாரணை, நாம் எப்பொழுதுமே கண்ணுக்குத் தெரியாத நுணதிகார மையங்களால் கண்கானிக்கப்பட்டும் கட்டுப்படுத்தப்பட்டும் வருவதை மீறித்தான் சுயமாக யோசிக்க வேண்டியிருக்கிறது.


இதெல்லாம் எனக்கு நேர்வதற்கான எந்த சாத்தியங்களுமில்லையென நீங்களோ நானோ எதையுமே இன்று தவிர்த்துவிட முடியாது. நாம் தப்பித்தலின் கனத்தில்தான் நம்மைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம். துரதிர்ஸ்டவசமாக அல்லது அதிர்ஸ்டவசமாகவோ மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகி விட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். ஒரேயொரு தினம் என்னவெல்லாம் நடக்க சாத்தியமிருக்கும். கொஞ்சம் வசதியானவர்களாய் இருந்தால் மருத்துவமனை அல்லது காஸ்ட்லியான ஜிகினா சாமியார்களின் மடம் இப்படி கரைசேர்த்தலுக்கான முயற்சி நடக்கும். இதுவே வசதியில்லாதவர்களாய் இருந்தால் இருக்கவே இருக்கு சாமியென்று எப்பொழுதும்போலவே அவனை நடத்தத் துவங்கிவிடுவார்கள். ஆனால் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் நமது அக்கம்பக்கம் ஆறுதலென்கிற பெயரில் மொத்தக் குடும்பத்தையும் பைத்தியமாக்கி விடுவார்கள். சர்வ நிச்சயமாய் இதுதானென காரணம் கூறிவிடமுடியாதுதான் யோசிக்கையில் ஒன்றுமட்டும் தோன்றுகிறது, பைத்தியமாதல் சிலருக்கு வாழ்வின் திரும்பமுடியாத பாதைக்குள் பயணம் செய்யத்துவங்குவதைபோல் ஆகிறது, இன்னும் சிலருக்கு சகிக்கவியலாத வாழ்வின் துயரங்களிலிருந்து விடுதலையாகி விடுவதாக இருக்கிறது………



ஆடு முட்டுச் சண்டை


இயந்திரத்தனமாகிப் போன வாழ்வின் கடந்தகாலங்களை நினைத்துப் பார்ப்பதென்பது பலருக்கு அனாவசியமானதொன்றாகவும், இன்னும் சிலருக்கு நினைத்துப் பார்த்து ஏக்கம் கொள்கிற அளவிற்கும்தான் இருக்கிறது, நாம் எழுதுகிற வாசிக்கிற எவ்வளவோ புனைவுகளை விடவும் ஆச்சர்யங்கள் கொண்டதாயிருக்கிறது. நம்மைக் கடந்து போகும் வாழ்க்கை மனிதர்களை பற்றின கதைகள் காலங்காலமாய் நம்மோடு பழங்கிக் கொண்டிருப்பவை தானென்பதும் அதன் எல்லைகள் எதுவரையிலுமானது என்பதும் வரையறுத்துச் சொல்ல முடியாததொன்று.


உங்களுடையது கிராமம் சார்ந்த வாழ்க்கை எனில் தவறாமல் நேர்ந்திருக்கும் செல்லப் பிராணிகள் வளர்த்த அனுபவம் நகர வாழ்விலும் இது காணக் கூடியதுதான் எனினும் அவ்வீடுகளிலிருக்கிற மேசை, நாற்காலிகளைப் போன்ற உயிரற்ற பொருட்களாகத்தான் இந்தப் பிராணிகளுமிருக்கின்றன. நிறைய ஆடுகளைப் பரமாரித்து வளர்த்து வரும் நண்பர் ஒருவருக்காக அவர் ஊர் சந்தையில் ஆடு வாங்கச் சென்றிருந்தோம். கொஞ்சம் விவசாயம் பார்க்கக் கூடிய அளவிற்கு நிலமிருந்தாலும் அவருடைய விருப்பமென்னவோ ஆடுகளை வளர்ப்பதில் தான் இருந்தது. வாரச் சந்தையை சுற்றி வந்து வேடிக்கை பார்ப்பதென்பது திருவிழா பார்பபது மாதிரியான சந்தோசமான அனுபவம். எந்த ஊர் ஜவுளிக் கடைகளிலும் பார்க்க முடியாதது துணி, மனிகள், ஆடுகள், சேவல்கள் என வித விதமாய் கலந்துகட்டி வியாபாரம் நடந்து கொண்டிருக்கும். சந்தை நடக்கிற இடங்களில் எப்பொழுதும் சுவாரஸ்யமான இரண்டு விஷயங்கள் சேவற்கட்டும், கடாமுட்டு என்று பொதுவாகச் சொல்லப்படுகிற ஆடு முட்டுச் சண்டையும்தான். மாநகர வார்த்தைகளில் சொல்வதனால் ஒவ்வொரு ஊருக்குமான பிரத்யேக ‘சூப்பர் மார்க்கெட்டுகள்’ இவை. ஒவ்வொது ஊரின் சந்தைக்கும் ஏதாவதொன்று ஸ்பெஷல் என்பது மக்களின் அபிப்பிராயம். அப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டு நம்பப்படுகிற அபிப்பிராயங்களின்படி நண்பர் ஊரின் சந்தையில் ஆடுகள்தான் பிரதானமும், பிரமாதமும்.


‘வரலாற்றுச்’ சிறப்புமிக்க அந்தச் சந்தையில்தான் பல மணி நேரேமாய்த் தேடியும் அவர் எதிர்பார்த்தமாதிரியான ஒரு ஆட்டினை எங்களால் வாங்க முடியவில்லை. முந்தைய இரவில் உண்ட உணவின் செரிமான நேரம் முடிந்துபோய் நீண்ட நேரேமாகி விட்டிருந்ததால் வயிற்றுக்குள்ளிருந்து அலாரம் எதையாது உள்ளே போடச் சொல்லி அலறத் துவங்கி விட்டிருந்தது. தண்ணீர் குடித்தால் வயிற்றுக்குள் வினோதமாக உருளுமே ஒரு ‘கொட கொட’ சப்தம் அது மாதிரியனதுதான் இந்த அலாரச் சப்தமும். ஆட்டை வாங்கியே ஆவதென்கிற நண்பரின் விடாப்பிடியில் நொந்துபோய் பொறுமையற்றவர்களாய் நாங்கள் வெளியிலிருந்த கூழ் விற்பவரை நோக்கி நகர்ந்தோம். நல்ல பசியில் மோர் கலந்த கூழ் குடிப்பதென்பது அற்புதமான விஷயங்களிளொன்று, முடிந்தவரை அது கம்மங்கூழாக இருப்பதும் தொட்டுக் கொள்வதற்கு மோர் வத்தல் வைத்துக் கொள்வதும் அழகிற்கு அழகு சேர்க்கும் விஷயங்கள். குடல்களின் வழி பயணித்த கூழின் குழுமையில் இனம் புரியாததொரு உறக்க சொரூபம் தவழ்ந்து வர தொடர்ந்து அங்கு இருப்பதா, அல்லது கிளம்பிப் போவதா என எங்களுக்குள் சந்தேகமும், மெல்லிய தயக்கமும் எழுந்த்து. சுணங்கிப் போவதா என எங்களுக்குள் சந்தேகமும், மெல்லிய தயக்கமும் எழுந்த்து. சுணங்கிப் போயிருந்த ஒரு காளையை தெளிவாக்கும் பொருட்டு பெரியவரொருவர் மிளகாய்த்தூள் கலந்த தண்ணீரை அதன் முகத்தில் அடித்தார். ஒவ்வொரு முறையும் தண்ணீர் அடிக்கப்படுகிற பொழுது மாடு சிலிர்த்து தன்னிலைப்படுத்திக் கொண்டது. ஆங்காங்கே கட்டப்பட்டும், அவிழ்த்து விடப்பட்டும் இருந்த ஆடு, மாடுகளின் அருமையான மூத்திர வாசணை அப்பகுதி முழுக்க காற்றில் கலந்து மணத்தது. இதில் எந்த வாசணை ஆட்டினுடையது எது மாட்டினுடையது என்பதெல்லாம் அவ்வளவு எளிதில் பிரித்துப் பார்த்துவிட முடியாது. ஆடு வாங்க வேண்டுமென நினைத்திருந்த எங்களின் எண்ணத்தினை கொஞ்சம், கொஞ்சமாய் மறக்கடிக்கச் செய்யும் பொருட்டு மூர்க்கமான வெயில் அவ்வெளி முழுக்க விழுந்து பரவத்துவங்கியது, திடீரென விழுந்த சுருங்கல் களைப் போல் சோர்வு ஒவ்வொருவரின் முகத்திலும் தீவிரமாய் படர்ந்து விட்டிருந்தது, எங்காவது உட்கார முடியுமாவென இடம் தேடி ஒரளவு மூத்திர வாசனை குறைந்திருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்தோம்.


சற்றே வளர்ந்த பூனையின் தோற்றத்தில் உடல்நிலை மிகவும் சிதைந்து போய் மெலிந்து பரிதாபத்திற்குறியதாய் காட்சியளித்த ஆடோன்றை வாங்கிக் கொள்ள முடியாமாவெனக் கேட்டு பெரியவர் ஒருவர் எங்கள் முன் வந்து நின்றார். அது ஆடுதானாவென்பதே எங்கள் ஒவ்வொருவருக்கும் பெரிய சற்தேகம். எந்த நம்பிக்கையில் அதனை நாங்கள் வாங்குவோமென நினைத்து எங்களிடம் கேட்டாரென ஆச்சரியமாய் இருந்தது. நாங்கள் எவ்வளவோ மறுத்தும் தன் முயற்சியிலிருந்து பின் வாங்காதவரால் ‘’ஒரு நூத்தி அம்பது ரூவா கொடுத்தா போதுந் தம்பி... ‘’என்பதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். எவ்வளவு நேரத்திற்குத்தான் இதையே திரும்ப சொல்ல முடியும் மனிதர் சலித்த மாதிரி தெரியவில்லை, எங்களுக்குத்தான் சில நிமிடங்களுக்கு மேல் அதனைத் தொடந்து கேட்பதற்கான திராணியில்லை. அவர் அப்படி கேட்டுக் கொண்டிருந்தது சங்கடமாகவே இருந்தாலும் அந்த ஆட்டினை வாங்க வேண்டுமென்கிற அவருடைய எண்ணத்தினை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியததாகத்தான் இருந்தது. ஏதாவதொரு வகையில் அவருக்கு சமாதானம் சொல்லி விட வேண்டுமென நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்க, பொறுமையிழந்து போனவராய் நண்பர் பணத்தை எடுத்து அவரின் கையில் கொடுத்தார். அந்த நிமிடத்தில் அந்தப் பேரியவரின் முகத்தில் பார்க்க நேர்ந்த பரவசத்தை ஒரு போதும் மறக்க முடியாது.

பெரியவர் சென்று விட்ட பின், நண்பர் வாங்கின ‘’புது’’ ஆட்டைப் பார்க்க எங்களுக்குப் பெரிய வேடிக்கையாய் இருந்தது. என்ன காரணத்திற்காய் வாங்கப் பட்டிருக்குமென நாங்கள் அதிகம் யோசித்து சிரமப்படாதபடி நாளைய பிற்பால் விருந்திற்கான பகுதியில் இதுவும் ஒன்றென அவரே கூறினார். வாயில் நுரை தள்ள கண்கள் முக்கால்வாசிக்கும் மேல் மூடிக்கொண்டுவிட்ட இதையுமா படையலாக்குவார்கள் என்கிற வியப்பு ஒருபுறம், இவர்கள் அறுக்கும் வரையிலுமாவது உயிருடன் இருக்குமாவென்கிற ஐயம் இன்னொரு புறமாய் எங்களுக்கு எழுந்தது, வலுவாக நிற்கக்கூட திராணியின்றி தடுமாறிக் கொண்டிருந்த ஆட்டின் பழைய கயிறை அறுத்துவிட்டு புதிய கயிறொன்றை கட்டி அவர் காட்டிக் கொண்டு சென்றதைப் பார்த்த பலரும் ‘’பெரிய கொங்காப் பயகலா இருப்பாய்ங்க போல ‘’ என்றுதான் கூறினார். யார் என்ன சொன்னாலும் அதனை ஆமோதித்து ஏற்றுக் கொள்வதைப் போல் நண்பர் கூச்சமின்றி அதனைக் கூட்டிக் கொண்டு நடந்தார். கிட்டத்தட்ட வீட்டிற்குக் கிளம்புவது என்ற நேரத்தில்தான் ஏதோ யோசித்தவராய் ‘’ஆட்ட சண்டக்கி விட்டா என்ன ? என்றார் நண்பர். விளையாட்டுக்கு சொல்கிறார் போலுவென்று நாங்கள் சத்தமாக சிரித்தோம் அட நெசமாத்தான்யா சொல்றேன்.. என்றவர் என்னன்னாலும் அறுக்கப் போற ஆடுதான என்று சமாதானம் சொன்னார். இனி நாங்கள் என்ன சொன்னாலும் அவர் கேட்கப்போவதில்லையெனத் தெளிவாகத் தெரிந்துவிட்டிருந்தது . இப்பொழுது எங்களுக்கு ஆர்வம், என்ன தான் நடக்கு துன்று பாப்போமே!.. போட்டிக்கு அதனைத் தயார் படுத்துகிற விதமாய் இரண்டு வாளி நிறையத்தண்ணீர்க் குடிக்க வைத்தோம் வாயிலிருந்து நுரை ஒருபுறம் வழிந்து கொண்டிருக்க, இன்னொரு புறம் ஆர்வத்தோடு தண்ணீர் குடித்துவிட்டு தானும் தயாரென்பதைப் போல் தலையை சிலுப்பிக் கொண்டது. போட்டிக்கு இந்த ஆட்டை நாங்கள் விப் போவதாகச் சொன்னதும் சுற்றியிருந்தவர்கள் சிரித்தனர். எனெனில் எதிர்த்து நின்றே ஆடுதான் அதுவரையிலும் அன்றைய தினச் சாம்பியன். அதற்கு அடையானமாய் சிலவிழுப்புண்களை பார்க்க முடிந்தாலும் உள் காயங்களைப் பற்றின புள்ளி விவரங்கள் கைவசம்மில்லை. எப்படிப் பார்த்தாலும் நூற்றி ஐம்பது ரூபாய் ஆடுதான் என்று நாங்களும் தைரியமாய் இருந்துவிட்டோம். கொசுக்குகிற வெயிலில் சட்டையெல்லாம் வியர்வையால் நனைந்து நாற்றமடித்து கொண்டிருந்தது. கசகசப்பான ஈரமும், காட்டமான வியர்வை நாற்றமும் குளித்த , குளிக்காது சக அன்பர்களின் உடலிலிருந்து எழும் கொடுமையான வீச்சமுமாய் ஆட்டுப் புழுக்கைகளின் வீச்சத்தினையும் மீறி நிரம்பியிருந்தது. பலத்த ஆராவாரங்களுக்கு மத்தியில் துவங்கிய சண்டையே அங்கிருந்த பலரும் பலகாலமாய் பார்த்திருந்தவர்கள் தானெனினும் இப்டியானதொரு ஆட்டை சண்டைக்கு விட்டுப் பார்த்திருக்க வாய்ப்பில்லை சுற்றியிருந்தவர்கள் யாவரும் உற் சாகமாய் விட்டுப் பார்திதிசுக்க வாய்ப்பில்லை சுற்றியிருந்தவர்கள் யாவரும் உற்சாகமாய் குரலெழுப்பி இரண்டு ஆடுகளையும் தயார்ப்படுத்தினர். பலருடைய ஆதரவும் நேரடியாக சாம்பியன் ஆட்டிற்குத்தான் இருந்திருந்தது என்பதோடு பந்தயப்பணஅதன் மீது தான் நம்பிக்கையோடு அதிகமாக கட்டியிருந்தனர். அவர்களின் நம்பிக்கைகளை யெல்லாம் சிதறடிக்கும் வண்ணமாய் பத்து நிமிடத்தில் சுருண்டு விழுந்தார் சாம்பியன் ஆச்சர்யமும் , அதிசயமுமாய் யாவரும் பார்த்துக் கொண்டிருக்க தேமேவென நின்று கொண்டிருந்தது நண்பரின் ஆடு, உற்சாகமாகிப் போன நண்பர் அதனை எங்களின் பார்வையில் விட்டுவிட்டு அவசரமாய் அங்கிருந்த பூக்கடையிலிருந்து ஒருமாலையே வாங்கி வந்து அதன் கழுத்தில் போட்டார். மறுநாளுக்கான மதிய விருந்திற்கான பட்டியலிலிருந்து தப்பிவிட்ட இதற்க்குப் பதிலாக சேவலொன்று மாட்டிக் கொண்டு விட்டிருந்தது.


எதிர்பாராத இந்த புதிய வரவால் அவர்களின் வீட்டிலும் குஷியாகி விட்டிந்தனர் . அதனை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்வதும் தேவையான வற்றைக் கொடுத்து விழுந்து, விழுந்து. கவனிப்பதுமாய் வீட்டிலுள்ளவர் போட்டி போட்டுக் கொண்டு அதனைக் கவனித்து. கொண்டனர். எலும்பு துறுத்திக் கொண்டிருந்த வெறும் தோலுக்குள் உட்ம்பென சொல்கிற புனவிற்கு வேகமாக சதைபோடத் துவங்கி அடுத்த சில நாட்களிலேயே நம்பமுடியாக அளவிற்கு கம்பீரமாய் வந்துவிட்டிருந்தது. ஆட்டை விற்றவனிடமே கொண்டு போய் காட்டினாலும் நம்பமாட்டாத அளவிற்கு மாறிப்போயிருந்தது இதன் தோற்றம். குறிப்பிட்ட சில நாட்கள் வரையிலும் வெளியில் எங்கும் விடாமல் அதனை பராமரித்து வந்தவர் போதுமானளவு அதன் வளர்ச்சியும் தோற்றமும் மாறியபின் புதுவகையான தெம்போடு தன் வீட்டின் மல்யுத்த வீரனை யுத்த களத்திற்க்கு அனுப்பத் தயாரானார். ஒரு பிடிப்பிற்காக அதற்கு கருப்பு என்று பெயர் வைக்க பெயருக்கேற்ற தோற்றமா? அல்லது தோற்றத்திற்கு ஏற்ற பெயரா? என கேட்கும் படி மிகப் பொருத்தமாய் இருந்தது அப்பெயர் தான் தாற்போதிருக்கும் சூழலை உணர்ந்தோ உணராதவாறோ பெருமிதத்தோடு உலவிய அதனை கருப்பு வென அவர் கூப்பிட்டால் குடுக்கும் கட்டளைக்குக் கட்டுப்படும்படி பழக்கிவிட்டிருந்தார். முதல் தடவையாக கருப்பு வென்ற அதே இடத்திலேயே அதன் மறுபிரவேசம் புத்துணர்ச்சியோடு துவங்கியது. முன்பு வதங்கிப் போய் அந்தக் களத்திலிருந்து சென்று ஆடு இன்று அபரிமிதமான கம்பீரத்தோடு வந்து நின்றிருப்பதை பார்த்த ஒருவராலும் நம்பியிருக்க முடியவில்லை, அது பழைய நூற்றி ஐம்பது ரூபாய் ஆடு என்பதை நண்பரின் பராமரிப்பினைப் பற்றி தங்களுக்குத் தெரிந்திருந்த தகவல்களை எல்லாம் பரிமாறிக் கொண்டு பெருமை பொங்கல் பேசினர்.


அந்தப் பெருமிதங்களையும் நண்பரையும் பொய்யாக்கிவிடாதவாறு அன்றைய தினம் கருப்பினுடைய தினமாகவே இருந்தது, அன்றைய தினம் என்றில்லை, அதன் பிறகு கருப்பு பந்தயத்தில் கலந்து கொண்ட பல தினங்களும் அகற்குரியதாகவே இருந்தது. தான் வளர்த்த ஆடுகளை எல்லாம் தம்பியின் நேரடிப் பார்வையில் விட்டுவிட்டு முழுக்க முழுக்க அவர் பந்தயங்களுக்குக் கூட்டிப் போவதிலேயே கவனம் செலுத்தினார். ஒவ்வொரு விஷயத்திலும் அமர் மேற்கொண்ட காத்திருப்பிற்கும் அசாத்தியமான பொறுமைக்கும் காரணம் இயல்பாகவே ஆடுகளைப் பராமரித்து வளர்பதற்கு நிறைய பொறுமை வேண்டுமென்பதுதான். பல காலமாக ஆடுகளுடனேயே இருந்தவரால் மிக எளிதாக அதன் வளர்ப்பு முறைகளுக்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொள்ள முடிந்தது. வழக்கமாக பட்டிகளில் வளர்க்கிற ஆடுகளைப் போலில்லாமல் இதனை சுதந்திரமாக உலவவிட்டிருந்தார். எதிர்பாராத இது மாதிரியான வரவுகள் நிறைய குடும்பங்களில் பெரும் சந்தோசம் ஏற்படுவதற்கும் சில நாட்களிலேயே கருப்பு வீடு என அடையானம் சொல்லுமளவிற்கு இதந் வெற்றிகள் சுற்று வட்டாரத்தில் பிரபலமாயின. குறுந் செய்திகள், மின்னஞ்சல் கார் மூலமாக தகவலனுப்பாதது ஒரு குறையென்றால் தொலைக்காட்சியின் விளையாட்டுச் செய்திகளில் செய்திகளில் சொல்லாமல் போனது சற்று வருத்தமான விஷயம் தான்.


மரணத்தை விடவும் பெரிய சாதனை என்னவாயிருக்கு முடியும்? பல ஊர்களுக்கும் சென்று வெற்றியோடு இவர்கள் திரும்பிய வருகையில் அந்த வீட்டிற்குத் திருவிழாக்களை வந்துவிடும். இதுமாதிரி பந்தயங்களுக்கு ஆடுகளை விடுவது சிலருக்கு வருமானம் சார்ந்த விஷய மென்றால், சிலர் தங்கள் கௌரவத்திற்காகவும் சண்டைக்கு விடுவதுண்டு,. இதில் வருகிற வெற்றியோ, தோல்வியோ இரண்டுமே மிக முக்கியமான விஷயம் , சிறு சிறு சச்சரவுகளில் துவங்கி சில சமயம் பெரிய வன்முறையளவிற்கு வளரக் கூடிய தருணங்கள் எல்லாம் வெகு சாதாரணமான நிதழ்வுகள் இப்படி கௌரவத்திற்காக ஆடுகளை சண்டைக்கு விடும் வழக்கம் மதுரையிலிருந்த பெரும் தொழிலதிபர் ஒருவருக்கு இருந்தது. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என அவருடைய ஆட்டிற்கு சிறப்புப் பெயர் வைத்துக் கூப்பிடுமளவிற்கு அதுவு பிரபலான வீரன்தான்,. கருப்பினுடைய போர்த் திறன்களைப் பற்றிக் கேள்விப்பட்ட தொழிலதிபர் இரண்டு ஆடுகளுக்குமிடையில் போட்டியொன்றை நடத்திப் பார்க்க விரும்புவதாக ஆளனுப்பி நண்பரிடம் பேசப் செய்தார். முதலில் சற்றுத்தயங்கிய நண்பர் சில நாட்கள் யோசனைக்குப் பின் சம்மதம் சொல்லிவிட்டார். பந்தயத்திற்கான தேதியும் , யுத்த களமாக தமுக்கம் மைதானமும் குறிக்கப்பட்டுவிட்டது. நண்பரை உற்சாகப்படுத்த இரண்டு வேன்கள் நிறைய உள்ளன் ஆட்கள் திருவிழா பார்க்கச் செல்கிற பரவரத்தோடு கிளம்பி வந்தனர். எதிர்த்தரப்பும் சாதாரணமானவர்கர்களில்லை என்பதால் அங்கும் கூட்டத்திற்குச் குறைவில்லை , பெருந்தொகை பந்தயம் பணமாய்ச் பேசப்பட்டதுடன் வெற்றி பெற்ற பின் சண்டை சச்சரவுகள் எதுவும் வந்து விடக் கூடாதென்பதிலும் எச்சரிக்கையாய் இருந்தனர், போட்டிக்காக சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்த இரண்டு வீரர்களும் எதிரெதிர்த் திசையில் நீண்ட தூரத்திற்கு தள்ளி நிறுத்தப்பட்டிருந்தனர். அனல்காற்று அடித்துக் கொண்டிருந்த தினமது, வெக்கையும், புழுதியுமாய் முட்டுவதற்கு இரண்டு ஆடுகளும் ஒடத் துவங்கின. இரண்டு பாறைகளை பெரும் விசையோடு மோத விட்டதைப் போல் ஆடுகளிரண்டும் மோதி மீண்டும் பின்னகர்ந்தன. மூர்க்கமான இந்த யுத்தத்தில் கருப்பினுடைய வலிமையான முட்டுக்களை பொறுக்க மாட்டாமல் எதிராளி சில நிமிடங்களுக்குள்ளாகவே சுருண்டு விழுந்தது. வந்திருந்த ஊர்க்காரர்களெல்லாம் ஊரின் பெருமையை தூக்கி நிறுத்திய மகிழ்ச்சியில் உற்சாகமாக கடச்சல் எழுப்பத் துவங்கிவிட்டனர். எதிர்பாராமல் நிகழ்ந்த அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எதிர்த்தரப்பு ஆட்கள் , நண்பரிடம் பேச்சு வார்த்தை நடத்தி எவ்வளவு பணமென்றாலும் உடனடியாக அதனை வாங்கிக் கொள்வதாகக் கூறினார். எவ்வித சலனமுமில்லாமல் இவர் வழக்கம் போல் அதற்கு மாலையைப் போட்டு ஊருக்குக் கிளம்பத் தயாராகிவிட்டிருந்தார். தொடர்ந்து சில நாட்கள் கருப்பை வாங்கி விடுவதற்காக தொழிலதிபர் காட்டிய தீவிரத்தை எந்தவிதத்திலும் நண்பரோ, நண்பரின் குடும்பமோ சட்டை செய்யவில்லை. பந்தயத்திற்கு அனுப்பிது போதுமென முடிவுக்கு வந்தவர்கள் அதன் பிறது மிகச் சுதந்திரமாக அதனை சுற்றவிட்டனர். அந்த ஊரிலிருந்த எல்லா வீடுகளுக்கும் செல்லப் பிள்ளையாய், சிறுவர்களுடன் விளையாடவும் செய்த அதனை துரதிர்ஷ்டவசமாய், ஓரு நாள் ஸார்ப்பம் தீண்டிவிட்டிருந்தது. முதல் நான் இதனை கவனிக்காதவர்கள் உடல் சுனங்கி வாயில் நுரை தள்ளத் துவங்கியதும்தான் அடித்துப் பிடித்து அதனை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார்கள். உயிர் பிழைக்க வைத்ததைத் தவிர வேறொன்றையும் செய்ய முடியாத அளவிற்கு அதனுடைல் அடுத்தடுத்த நாட்களில் உருக்குலைந்து போய்விட்டிருந்தது. போர் வீரனாகப் பார்த்ததை இப்படி பார்க்கிற மனதைரியமில்லாமல் தன் வயற்காட்டிலேயே கால்வாசி உயிருடனிருந்து அதனைப் புதைத்தனர். அதன்பிறகு ஆடுகள் வளர்ப்பதையே விட்டுவிட்ட அந்தக் குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தில் வந்த சிறு தெய்வமாகவே இன்னும் அதனை வணங்குகின்றனர். ஜீவகாருண்யம் பற்றின எவ்வளவோ கதைகளை பாடப்புத்தகங்களில் படித்துப் பார்ப்பதனை மட்டுமே இன்றைய வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அபூர்வமாய் சிலர் இன்னும் சக உயிர்களின் மீதான காதலையும், நேசத்தையும் அர்த்தமுள்ளதொன்றாக மதிக்கின்றனர்.




சொற்களுடன் கழிந்த சில நாட்கள்


ஊரில் எல்லோருக்கும் தெரிந்த ஆள் அவன் ஒரவனாக மட்டும் தான் இருக்கமுடியும். வெள்ளாகுளத்தில் அவனைத் தெரியாமலிருப்பர்கள் ஒன்று வெளியூர்க்காரர்களாக இருக்க வேண்டும் . அல்லது அவ்வப்பொழுது ஊருக்கு வந்து போகிற அரசு சம்பந்தப்பட்ட ஆட்களாக இருக்க வேண்டும். ‘எச்சிதுப்பி’ யென அவனுக்கு பெயர் வந்ததெப்படியென ? யாரிடமாவது கேட்டால் அவ்வளவு தெளிவாக யாராலும் காரணம் கூறிவிட முடியாது. அந்த பெயர் வந்து தொலைத்ததா என ஆராய்வது சற்றேறக் குறைய அனுமார் வாலாய் நீள்கிற கதைதான். வயது நிச்சயமாக முப்பதைத் தாண்டது என்றுதான் முதல் பார்வையில் தோன்றும். ஆனால் ஏழு கழுதை வயதாகித் திரிகிற நாயது. ஏழு கழுதை வயதென்றால் கழுதைக்கி எத்தனை வயதென நீங்கள் கெட்பது புரிகிறது, கதைக்கு கழுதைதான் முக்கியம் கழுதையின் வயதல்ல , மொத்தமாக நாற்பது,நாற்பத்தைந்து கிலோவைத் தாண்டாது அவனுடல், சுருங்கிய காகிதம் போல்ஆளே வினோதமான தோற்றத்திலிருப்பான். சிலர் அவனை மனநோயாளியேன்றும் இன்னும் சிலர் ஞானக்கிறுக்கனென்றும் சோல்வார்கள், ஆனால் இரண்டுமே, இல்லாதவனேன்றுதான் எனக்குப் படுகிறது.


அந்த ஊரிலிருந்த கிரஷ்ஷரில் எனக்கு வேலை கிடைத்திருந்தது. பெரிய ஆபிசர் வேலையொன்றுமில்லை, கணக்கு , வழக்குகளை எழுதிக்கொண்டு மற்றவர்களுக்கு வேலை பிரித்துக் கொடுக்கிற கூப்பர்வைசர் வேலை ஊர்க்காரர்களின் வார்த்தையில் சொல்வதென்றால் கணக்கப்பிள்ளை, ஸஅந்தக் கண்றாவிக்கு இதுவொன்றுதான் குறைச்சல், ] வேலையொன்றும் பெரிதாக இருக்காது. காலையில் ஒரு மணி நேரம், மாலையில் அரைமணி நேரம் இடைப்பட்ட நேரத்தில் காட்டுக்குள் சுற்றிக் கொண்டிருப்பதும், புஸ்தவம் படிப்பதும் தான் பிரதான வேலை. ஒரே சிக்கல், கிரஷ்ஷருக் செல்வதற்கு இந்த ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டர நடக்க வேண்டும். இந்தப் பக்கமுமில்லாமல் , அந்தப்பக்கமுமில்லாமல் இரண்டு ஊர்களுக்கு இடையில் ஒளிந்து கிடந்தது கிரஷ்ஷர். காரணமில்லாமலில்லை அது சற்று விலாவரியாக சொல்ல வேண்டிய சமாச்சாரமென்பதால் தனியாக இன்னொரு பகுதியில் எழுதுகிறேன். வந்த விஷயம் எச்சித் துப்பியைப் பற்றி முதல் நாள் பேருந்தைவிட்டு இறங்கி கிரஷ்ஷர் செல்வதற்கு ஒரு பெருயவரிடம் வழி கேட்டுக் கொண்டிருந்தேன். எனக்குப் பின்னாலிருந்து ஒடிவந்தவன் ‘த்தூ’ ‘ த்தூ’ என துப்பத் துவங்கி விட்டான் , என்ன ஏதென்று நீ பார்க்க திரும்பிய போழுது சி துளிகள் என் முகத்திலும் பட்டுவிட்டது , எனக்குக் கொஞ்சமும், கூடவே இதென்னாடா வம்பென்று பயமும் ஒருசேர வந்துவிட்டது , அதற்குள்ளாக அருகில் நின்றிருந்த பெரியவர் மண்டையில் ரெண்டு தட்டு தட்டி அவனை வீட்டுக்குப் போகச் சொன்னா. தப்பா எடுத்தக்காதீய தம்பி கிறுக்குப்பய.... என்றார் தடுமாறி, தடுமாறி அவன் பேசியதில் போர்வையின்றி வார்த்தைகள் வந்து விழுந்தன. என்னதான் விஷயமென்று தெரிந்து கொள்வதற்கு வலியதொரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு நான் அவனை நெருங்கினேன். வார்த்தைகளும் எச்சில்த் துளிகளும் ஒரசேர அவன் வாயிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்தன டிரான்ஸ்பாரம் டிரான்ஸ்பார மென இடையிடையே அவன் சுட்டிக் காட்டியது காட்டுக்குள் புதிதாய் முளைத்திருந்த அலைபேசி கோபுரத்தை .


ஊர்க்காரர்களுக்கு அவனுடைய பிரத்யேகமான மொழி நன்றாகவே பழகிவிட்டிருந்தது போலும் பெரியவர் சிரித்துக் கொண்டே செல்ஃபோன் வர வெச்ச கம்பெனியிலிருந்து வந்திருக்கீங்களோன்று, நௌச்சுத் திட்டறான் தம்பீ... என்றவர் அவனுக்கு நான் அந்த ஆளில்லை என்று சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தார். அப்படியும் கூட திருப்தியுநாதவனாய் ‘த்தூ’ ‘த்தூ’ என்று துப்பிக்கொண்டிருந்தான் . முதல்நாள் என்பதால் நீண்ட நேரம் அவரோடு பேச முடியாதவனாய் நான் விறுவிறுவென்று கிருஷ்ஷரைப்பார்த்து நடக்கத் துவங்கிவிட்டேன்.


அன்று பிற்பகலில் உணவு நேரம் முடிந்த பிறகு அந்ந ஊரிலிருந்து வேலைக்கு வருபவர்களிடம் மெதுவாக அவனைப் பற்றி விசாரித்தேன். போதுவாக எந்த வேலைக்குப் போனாலும், அது என்ன மாதிரியான வேலையாயிருந்தாலும் உடன் வேலைபார்ப்பவர்களுடன் மிக வேகமாக பேசிப்பழகி விடுவேன் . அதுவும் இதுமாதிரியான இடங்களென்றால் மட்டற்ற சந்தோசமிருக்கும் , யாரைப் பாத்தும் பயப்படவோ, சங்கடப்படவோ தேவையிருக்காது. வந்த முதல் நாளே அவனைப் பற்றி ஊர்க்காரர்களிடம் விசாரித்ததில் அவர்களுக்கு கொஞ்சம் ஆச்சர்யமாகத் தான் இருந்திருக்கும். பிறகு அன்று காலையில் நடந்த சம்பவத்தை அவர்களிடம் கூறிய போழுது அத்தனை பேருக்கும் நிலைகொள்ளாத சிரிப்பு. வந்ததும், வராததுமா நல்ல ஆசிர்வாதம்ப்பா உனக்கு, அதுக்கும் ஒரு கொடுப்பின வேணும்ல... என முடிந்தவரை கிண்டலடித்தார்கள். பொதுவாக அவனை வெறும் கிறுக்குப்பயப்பா.. என்றுதான் மற்றவர்கள் சொன்னார்கள் அந்த அலைபேசி கோபுர விஷயத்தைச் சொல்லி கேட்ட பொழுதுதான், அலைபேசி கோயுரமிருக்குமிடம் அவன் குடும்பத்திற்குச் சொந்தமான வயல் என்று தெரிந்தது. துவக்கம் முதலே அது அவனுக்குப் பிடிக்காது, வீட்டிலிருப்பவர்கள் இவனுக்கென்ன வந்தது என்று இவனைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பணம் கிடைத்தால் சரியென்று ஒப்புக்கொண்டனர் கோபுரம் வைக்கும் பொழுதே அவன் அடிக்கடி அங்கு போய் இம்சையேக் கொடுக்கிறானென சில நாட்கள் வீட்டிலேயே அடைத்து வைத்திருக்கின்றனர். தபாவம், தனியாக அவன் அழுது தீர்த்ததுதான் மிச்சம். பிறகு வேலையெல்லாம் முடிந்து அவனை வெளியே விட்டபின் ஊருக்குப் புதிதாக வருபவர்கள் இவன் கண்ணில் பட்டு விட்டான் இந்த மரியாதைதான். ஒருவேளை, இந்த அலைபேசி கோபுரம்தான் அவன் மனநிலை பாதிக்கப்படுவதற்குக் காரணமோவென்று இப்பொது நீங்கள் நினைக்கிற மாதிரிதான் சில நொடிகள் நானும் நினைத்திருந்தேன், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, சிறு வயதிலிருந்தே அவன் அப்படித்தான். ஒரே நாளிலேயே அவன் உருவமும், குரலும் செய்கைகளும் அழுத்தமாக எனக்குப் பதிவாகிவிட்டிருந்ததது.


நான் கலையில் வேலைக்கு வரும் பொழுது என்னருகில் வந்தமர்ந்த பெண் முந்தைய தின சம்பவத்தை சொல்லிக் காட்டி சிர்த்தாள். முப்பத்தைந்து வயதிருக்கும், இந்த வயதுப் பெண்கள் சற்று சுமாராக இருந்தாலே நிதானமாக ரசிப்பவனென்பதால் அவனை பேசவிட்டுவிட்டு நானும் சிரித்தபடியே அமைதியாக இருந்தான். அணிந்திருந்த உடை, வேறண்ட் பேக் இதெல்லாம் கவனித்து அவவூர்ப் பற்றிக் கூடத்தில் பணிபுரியும் ஆசிரியேயென்ற தான் நின்த்தேன். ஸகையில் குடை வைத்திருந்ததாக நினைக்கவில்லை]. பெரும்பாலான சமயங்களில் என் கணிப்புகள் தவறாகத்தான் இருக்கிறது. அவன் அவவூர் தபால் அலுவலகத்தில் வேலை பார்ப்பன். சம்பம் நடந்த இடத்தை ஒட்டியிருந்த கைப்பிடியளவு கட்டிடம் தான் தபால் அலுவலகம் என அவன் சொல்லித்தான் தெரிந்தது. அவளும் சில நாட்களுக்கு முன்பாகத் தான் அங்கு வேலைசேர்ந்திருக்கிறாள் என்னை மாதிரியேஅவளுக்கும் நம்மாள் ஆசிர்வாதம் வழங்கியிருக்கிறாள். பிறகு பேருந்தை விட்டு இறங்குகிற வரையிலும் அதைப்பற்றித்தான் விலாவாரியாகப் பேசிக் கொண்டிருந்தாள். பெண்களால் மட்டும் தான் ஒன்றுமேயில்லாத விஷயங்களைக் கூட விலாவாரியாக பேச முடியும் போல, அதற்காக கேட்டுக் கொண்டிருப்பவனின் காதில் இரத்தம் வருவம் வரை விடாமலிருந்தாள் bப்படி? சுப்புலட்சுமி என்று பெயரை பிரிகிற நேரத்தில் அவள் சொன்னதுதான் கொஞ்சம் அழகான அவளை இன்னும் அழகானவளென உணர்த்தியது . இரண்டு பேரும் அருகிலிருந்த கடையில் தேநீர் அருந்தினோம் ஸஅவளுடைய அக்கவுண்ட்டில்தான் அதன் பிறகு பல நாட்கள் தேநீர் குடித்ததும் அவள் உபாயத்தில்தான்.] இன்று பார்க்க முடியுமாவென சில நிமிடங்கள் நின்று பார்த்தேன். வாய்ப்பில்லை, அதன் பிறகு இரண்டு மூன்று நாட்களும் பார்க்க முடியாமலே இருந்தது. இன்னொரு புறம் இரண்டாவது நாளிலேயே சுப்புலட்சுமியின் கொடுமையே என்னும் சில நிமிடங்களுக்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாததால் பெரும் பாலும் நகர்ந்து விடததான் பார்ப்பேன். சில நிமிடங்களேனும் அவள் பேசுவதை கேட்க வைப்பதற்கென அவள் மேற்கொள்ளும் யுத்திதான் தேநீர் அருந்தக் கூப்பிடுவது, மிகுந்த சிரமப்பட்டு தன்னை புத்திசாலியாக காட்டத்துடிக்கும் சுபாவம் அவளுக்கு, ஒரே நேரத்தில் சீரியல்களைப் பற்றியும், ஏதாவதொரு பத்திரிக்கை செய்தியைப் பற்றியும் மாறி, மாறி, பேசுவாள்.


நாட்களுக்கு பின்பாகத்தான் அவள் கிரைம் நாவல்களின் தீவிரமானதாக என்பது தெரிந்தது. எப்படியாவது என்னையும் கிரைம் நாவலின் தீவிர வாசகனாக்க வேண்டுமென முயற்சித்தாள். வம்புக்கென்றே நூலகத்திலிருந்து ஒருநாள் கால்வினோவின் குளிர்கால இரவில் ஒரு பயணி நாவலை எடுத்துக் நல்ல புத்தகமென படிக்கக் கூடுத்தேன். நான் வாசித்திருக்கவில்லை என்பது வேறு விஷயம், அடுத்தநாள் வந்து புத்தகத்தைக் கொடுத்தவள், அதன் பிறகு கிரைம் நாவல்களைப் பற்றிப் பேசுவதைத் குறைத்துக் கொண்டாள்.


சமாச்சாரம் வேறெங்கோ திசைமாறிவிட்டதோ. பெண்களைப் பற்றி எழுதத் துவங்கிட்டு அவ்வளவு எளிதில் எப்படி பேனாதிரும்பி வரும்? இரண்டு, மூன்று தினங்களுக்குப் பின் அவனை பார்க்க நேர்ந்தது காட்டுப்பாதையிலிருந்த ஒரு நெல்லிக்காய் மரத்தடியில் அவன் நின்றிருந்த பொழுதுதான். என்னைப் பார்த்தும் வேகமாக ஒடி வந்தான். மறுபடியும் எச்சில் துப்பத்தான் போகிறானோ வென்று எனக்குப் பயம், இன்னொரு புறம் ஒடினா பையிலிருக்கும் சோறு, குழம்பு எல்லாம் கொட்டிவிடுமென்பதால் வழியின்றி அப்படியே நின்றேன்.அருகில் வந்ததும் அவன் சிரித்தப்பிறகுதான் சற்று ஆசுவாசமாக இருந்தது கை நிறைய அரை நெல்லிக்காய்களை அள்ளிக் கொடுத்தவன் சிரித்தபடியே மீண்டும் மரத்தடிக்கு ஒடிவிட்டான். அவன் இயல்பு எதுவெனத் தெரியாமல் குழப்பத்துடனும், சற்று நிம்மதியுடதும், நான் நடக்கத் துவங்கினேள். எங்கே அடுத்த நாள் இதைப்பற்றி சுப்புவிடம் சொன்னால் அதற்கும் மிகப்பெரிய கதையொன்றைச் சொல்லி விடுவாளோ என்று பயந்து சொல்லிக் கொள்ளவில்லை. அடுதடுத்த சந்திப்புகளில் எனக்கும் , அவனுக்குமான சுவாரஸ்யமான அவனைப் போன்று மாறியிருக்க வேண்டுமென நான் சமாளித்தேன். பார்த்தால் ஊரே அவனைப் போன்று மாறியிருக்க வேண்டுமென நான் சமாளித்தேன். அவ்வப்பொழுது என்னைத் தேடி கிரஷ்ணருக்கும் வந்து வருவான் ,கிரஷ்ஷரிலிருந்தவர்கள் இதென்னங்கடா கூத்து? என சிரித்துக் கொள்வார்கள், அடிப்படையில் அவன் சாதாரணமானவன் தான். ஆனால் மற்றவர்களுக்குத்தான் சில நிமிடங்களுக்கு மேல் அவனைத் தொடர்hமலோ, அடிக்காமலோ அவனிடம் பேசமுடியாது. அப்படி இம்சித்தால் மட்டும் தான் அவன் எச்சி துப்புவது, அவனை எச்சில் துப்ப செய்து வேடிக்கை பார்பற்கென்றே ஆட்கள் சீண்டிக் கொண்டிருப்பார்கள். அவனுக்காகவே மாலை நேரங்களில் தாமதமாக வீட்டிற்குப் போக நேர்ந்தது. அந்த சின்ன ஊருக்கு ஏராளமான வழிகளை அவன் உருவாக்கி வைத்திருந்தான், வேலை முடிந்து அவனோடு திரும்பினால் தினம் ஒரு பாதையில் கூட்டிச் செல்வான் அது அவனுக்கு மட்டுமே வாய்த்ததென்பதால் தனியாக நான் ஒருபோதும் முயற்சித்ததில்லை . ஊர்க்கார்ர்களுக்கு என்னை நன்றாகத் தெர்ந்திருந்தது. இன்னொரு வகையில் என்னையும் அவளின் பிரதியாகத்தான்.


ஊரில் திருவிழா போட்டிருந்தார்கள். கிராமத்துத் திருவிழாக்கள் எப்பொழுதுமே வசீகரமானவை. எந்த ஊர், யார் வீட்டுக்கு வந்த சொந்தமென எவ்விதமுமான பாகுப்பாடுமிருக்காது . ஊருக்குள் வருகிற எல்லோருமே விருந்தாளிகள் தான் கிரஷ்ஷரில் பண்புரியும் ஆப்கள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் அவன்தான் கூட்டிப் போனான். எங்கு போனாலும் அவர்கள் வீட்டிற்குத் அவன்தான் கூட்டிப் போனான். எங்கு போனாலும் அவர்கள் வீட்டிற்குத் தான் சாப்பிடச் செல்ல வேண்டுமென அவன் அம்மா கண்டிப்பான உத்தரவிட்டிருந்தார். நான் சுப்புவையும் அழைத்திருந்தேன். நாங்கள் சாப்பாடையெல்லாம் முடித்த பிறகு வந்த சுப்பு அவர்களோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, கணவர் பையனென அன்றும் என்னை வதைக்கத் துவங்கி விட்டாள். வழியே இல்லமல் அன்றைய பிற்பகல் முழுக்க ஊரைச் சுற்றி வந்த படி அவள் பேசுவதையெல்லாம் கேட்க வேண்டியதாகிப் போனது. அவள் எவ்வளவு பேசினாலும் நான் கோபித்துக் கொண்டதில்லை அதன் பிறகு சில மாதங்களிலேயே அந்த வேலையிலிருந்து நான் விலக வேண்டியதாகிவிட்டது. மன்னிக்கவும், விலக்கப்பட்ட வேண்டியதாகிப் போனது, பணியில் என் அசிரத்தையென முதலாளிகள் காரணம் கூறியனார்கள். எனக்கு எப்பொழுதும் போல் அதில் வருத்தமுமில்லை, மகிழ்ச்சியுமில்லை, அடுத்த வேலையைத் தேடத் துவங்கி விட்டேன். முன்பே சொன்னபடி கிரஷ்ஷரைப் பற்றின உண்மையான சமாச்சாரங்களை இன்னொரு பகுதியாக எழுதுகிறேன். ஒவ்வொரு முறையும் இது மாதிரி யணி மாறுகிற சமயங்களில் உடன் பணிபுரிகிற நண்பர்களைப் பிரிவது சற்று வருத்தமான விஷயம்தான், என்றாலும் இதையெல்லாம் தடுக்க முடியுமா என்று?


அதன்பிறகு கூட அவ்வப்பொழுது வெள்ளாகுளம் போய் வருவது வழக்கமாகத் தானிருந்தது சென்னை வந்ததும் நீண்ட இடைவெளி மட்டும்ப் போக, பெரிதாக அப்வூருடன் தொடர்புகளில்லை சில நாட்களுக்கு முன்பு ஒரு முறை போய் வரலாமென சென்றிருந்தேன் அவனுக்கு அவ்வளவு சந்தோசம். மாலை ஊருக்குக் கிளம்புகிற வரை என்னுடனேயே இருந்தான். பழைய அலைபேசி நான் மாந்நியிருந்ததால் எப்பொழுதாவது அலைபேசும் சுப்பவும் தொடர்பில் இல்லாமல் இருந்தாள் நேரில் சந்திக்கையில் புதிய எண்ணைத் தராததற்காய் என்னிடம் கோபித்துக் கொண்டவள் அத்தனை நாட்களுக்குமாக சேர்த்துப் பேசினாள். எப்பொழுதும் போல் நான் சிரித்துக் கொண்டிருந்தேன் நான் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என சொன்னதை அவளால் நம்ப முடியவில்லை, நிச்சயமாக ஒரேயொரு கிரைம் நாவலாவது எழுதிவிடுவேனென அவளை சந்தோசப் படுத்துவகற்க்hகக் கூறினேன். அவளும் சிரித்தபடியே அதுக்கெல்லாம் கொஞ்சம் அறிவு சரியாக சொல்ல முடியவில்லை, யாருக்காக வென்று உங்களுக்குப் படுகிறதோ அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.