Powered By Blogger
இந்த வாசல் ஏதோவொன்றின் திறப்பு, அல்லது ஏதோவொரு பயணத்தின் தொடர்ச்சி..இலக்கற்ற பயணிகளாய் இளைப்பாற வரும் அவ்வளவு பேருக்கும் கொஞ்சம் அன்பும், சில கதைகளையும் கைகளில் வைத்து காத்திருக்கிறேன்..

திங்கள், 17 மே, 2010

சிரிக்கும் புத்தர்......

சாமத்தில் எப்போதுமிருக்கும் கனவில்
சிரித்துக் கொண்டிருக்கும் புத்தனின்
இதழ்களில் குருதி வழிவது
வழமையாகியிருக்கிறது
எம்
சமர் பற்றின கதைகளில்
எரியும் நிலமொன்றின் மீது
நடனமாடிக்கொண்டிருக்கும் கடவுளர்களும்
கைகளில் கொஞ்சம் ஆயுதம்
எடுத்திருக்கிறார்கள்
பேரதிகாரத்தின் நாவுகளில்
இன்னும் சமாதானத்திற்கான
பாடலிருக்கிறது..
ஒரு மழை நாளில் நிகழ்ந்ததென
சந்தோசமான வொன்றை சொல்லிக்கொள்ள
முடிகிற சாத்தியமில்லை
எப்பொழுதிற்கும்
எம் குழந்தைகளின்
தலைகளில் சொந்த நிலம்
சிறு புள்ளியாகிருக்கிறது

என்னால் தொடர முடியாத இக்கவிதையை
யார் வேண்டுமானாலும் நிரப்பலாம்..
எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதப்படலாம்..
( இதிலாவது இணைவீர்களா என பார்ப்போம் எம் தமிழினமே)

2 கருத்துகள்:

  1. நானும் தொரடலாம் தான்,
    எதைச் சொல்ல, எதை விட,
    வலிகளைச் சொல்லி வருத்த,
    வருந்த திராணியற்றுப் போனவளாய்....!

    பதிலளிநீக்கு
  2. சொல்லொணா துயரம் தந்த தொடுதலில்
    வான் அழுது விட்டிருந்த ஒரு மாலைப்பொழுதின்
    மன இறுக்கம் தளர வேண்டி நின்றேன் விடுதலை
    இன்னுமொருமுறை இறக்காமாட்டா இதயங்களுக்காய்
    இறைஞ்சி நின்றேன் இறைவா நீ வைத்திருக்கும்
    ஆயுதங்களுக்கு நேரம் வரவில்லையா இன்னும்
    அழித்தலின் போது அவனுக்கெ உதவினாய்
    காத்தலிலாவது வருவாய் என்றிருக்க, நீ
    இரண்டாவது திருமணம் புரிந்துகொண்டாய்
    நம்மாகாக நாம் போராட, உனக்கு ஏன் படைக்கவேண்டும்
    நாளை அவன் உன்னிடமும் வருவான் நீ எங்கு செல்வாய்..

    பதிலளிநீக்கு